Rasi Palan Today On 7th February 2025 : மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளில், ஒவ்வொருவருக்கும் அவர்களின் நாள் அமைவது அவர்களின் கிரகப்பலன்களை வைத்துதான் இருக்கிறது. அந்த வகையில், இன்று சில ராசிகளுக்கு ஏற்றமும், சில ராசிகளுக்கு இறக்கமும் இருக்கிறது. அவை என்னென்ன ராசிகள் என்பதையும், உங்கள் ராசிக்கு என்ன பலன் இருக்கிறது என்பதையும் இங்கு பார்ப்போம்.
மேஷம்
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். காப்பீடு துறைகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். எழுத்து துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அஸ்வினி : தீர்வுகள் கிடைக்கும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : மாற்றமான நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். இழுபறியான சில வரவுகள் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
கிருத்திகை : வேறுபாடுகள் குறையும்.
ரோகிணி : குழப்பமான நாள்.
மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
மிதுனம்
நட்பு வட்டம் விரிவடையும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். பணி நிமித்தமான செயல்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். அனுபவம் கிடைக்கும் நாள்.
மிருகசீரிஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
திருவாதிரை : செயல்களில் கவனம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்
கடகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வித்தியாசமான சிந்தனைகள் உருவாகும். இடது கண் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் மேம்படும். தூர தேச பயண எண்ணங்கள் கைகூடிவரும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். அலங்கார விஷயங்களில் ஈர்ப்புகள் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.
புனர்பூசம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூசம் : ஆர்வம் மேம்படும்.
ஆயில்யம் : ஈர்ப்புகள் ஏற்படும்
சிம்மம்
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரிய எண்ணங்கள் ஈடேறும். முயற்சிக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். நெருக்கடியாக இருந்துவந்த சிக்கல்கள் குறையும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். நிர்வாக திறமைகளால் மேன்மை உண்டாகும். புகழ் மேம்படும் நாள்.
மகம் : ஆசைகள் நிறைவேறும்.
பூரம் : மதிப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : சிக்கல்கள் குறையும்.
கன்னி
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு அதிகாரம் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி வரும். திறமை வெளிப்படும் நாள்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : சிந்தனைகள் உண்டாகும்.
சித்திரை : அதிகாரம் மேம்படும்.
துலாம்
வியாபாரத்தில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சுபகாரிய முயற்சிகள் ஈடேறும். குழந்தைகளின் மேற்படிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். கற்பனைத் திறன் மேம்படும். மறதி பிரச்சனைகள் குறையும். செல்வச்சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.
சித்திரை : தாமதங்கள் குறையும்.
சுவாதி : பிரச்சனைகள் நீங்கும்.
விசாகம் : தேவைகள் நிறைவேறும்.
விருச்சிகம்
பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். வெளி வட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். இழுபறியான சில பணிகள் நிறைவு பெறும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.
விசாகம் : மதிப்புகள் தாமதமாகும்.
அனுஷம் : விவேகத்துடன் செயல்படவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
தனுசு
உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.
மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
பூராடம் : மாற்றம் பிறக்கும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.
மகரம்
நெருக்கமானவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். மனை விற்பனையில் இழுபறியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வழக்கு செயல்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
திருவோணம் : இழுபறியான நாள்.
அவிட்டம் : முடிவுகள் கிடைக்கும்.
கும்பம்
மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வேலையாட்கள் மாற்றத்தில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் அலைச்சல்கள் ஏற்படும். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். சிற்றின்ப செயல்களில் ஆர்வம் ஏற்படும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். இன்னல்கள் குறையும் நாள்.
அவிட்டம் : சிந்தனை மேம்படும்.
சதயம் : நிதானம் வேண்டும்.
பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.
மீனம்
பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். செலவு நிறைந்த நாள்.
பூரட்டாதி : மாற்றமான நாள்.
உத்திரட்டாதி : அனுபவம் அதிகரிக்கும்.
ரேவதி : ஒத்துழைப்பான நாள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | சனி பகவானின் கோப பார்வையில் 4 ராசிகள்! 40 நாளில் என்ன வேணாலும் நடக்கலாம்..
மேலும் படிக்க | ரோஜா தினத்தில் காதல் பூ மலர்தல்..12 ராசிகளின் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ