Delhi Election 2025: டெல்லி தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை பாஜகவே முன்னிலை வகித்து வருவதால் டெல்லியில் பாஜக ஆட்சி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. கடந்த 1993ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று 1998ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது.
அதன் பிறகு தொடர்ந்து 3 முறை காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. 2013ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 2013ஆம் ஆண்டு தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய நிலைக்கு போனது. அதையடுத்து ஆம் ஆத்மியே தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இந்த நிலையில், சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது டெல்லியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
2014ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைக்க முடிந்த பாஜகவால் நாட்டின் தலைநகரில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த நிலையில், தற்போது டெல்லியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
இந்த முறையும் காங்கிரஸ் ஜீரோ
கடந்த இரண்டு தேர்தலிலும் ஒரு தொகுதியை கூட காங்கிரஸ் கட்சியால் வெல்ல முடியவில்லை. இம்முறையும் அது தொடர்கிறது. 12.30 மணி நிலவரப்படி 70 தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. முந்தைய காலத்தில் தொடர்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்த காங்கிரஸ் தற்போது தொடர்ந்து மூன்று முறை ஒரு தொகுதி கூட வெல்ல முடியவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஆம் ஆத்மி கோட்டை விட்டது எங்கே?
ஆம் ஆத்மி கட்சி தான் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறது. இதுவே மக்கள் மத்தியில் ஓர் அதிருப்தியாக பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. இது முதல் காரணம் ஆகும்.
தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆம் ஆத்மி கட்சியின் இந்த பின்னடைவுக்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது மதுபான ஊழல் முறைகேடு சொல்லப்படுகிறது. ஊழலுக்கு எதிரான பிரசாரத்தில் அன்னா ஹசாரேவுடன் கைகோர்த்து மிஸ்டர் கிளீன் என்ற பிம்பத்துடன் டெல்லியில் ஆட்சியைஅ அமைத்த அரவிந்த் கெஜ்ரிவால் மீதே ஊழல் குற்றச்சாட்டு விழுந்தது. இது ஆம் ஆத்மி மீது அதிருப்தி அலையை ஏற்படுத்தியாக கூறப்படுகிறது.
பாஜகவின் வெற்றிக்கு என்ன காரணம்?
மேலே கூறப்பட்ட ஆம் ஆத்மி மீதான அதிருப்தி அலை பாஜகவிற்கு வாக்குகளாக மாற்றி இருந்தாலும், மற்றொரு முக்கிய காரணமும் பாஜகவின் வெற்றிக்கு காரணமாக உள்ளது. அதாவது பாஜக மத்தியில் தொடர்ந்து மூன்றாவது முறை வென்றுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கே காரணம் ஆகும். அந்த செல்வாக்கானது மாநிலங்களிலும் குறையாமல் உள்ளது. இதுவரை பாஜக முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தவில்லை. இருப்பினும் பிரதமர் மோடியின் செல்வாக்கு கடந்த 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் அக்கட்சிக்கு வெற்றியை தேடி தர உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ