அரசியல் கட்சிகள் அள்ளி விடும் ‘இலவச’ வாக்குறுதிகள்; SC அளித்த முக்கிய உத்தரவு

தேர்தலை மையமாக வைத்து இலவசங்கள் திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கும் அரசியல் கட்சிகளின் சமீபத்திய போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என பொது நலன் மனு தாக்கல்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 27, 2022, 10:43 AM IST
  • தேர்தலை மையமாக வைத்து இலவசங்கள் திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கும் அரசியல் கட்சிகள்.
  • இலவசத் திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும்.
  • வழக்கை ஆகஸ்ட் 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அரசியல் கட்சிகள் அள்ளி விடும் ‘இலவச’ வாக்குறுதிகள்; SC அளித்த முக்கிய உத்தரவு title=

 

தேர்தல் சமயத்தில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் இலவச திட்டங்கள் பல்வற்றை நடைமுறைப் படுத்துவதாக கூறி வாக்குறுதிகள் அறிவிப்பது தற்போது பெரும்பாலான மாநிலங்களில் மிகவும் வழக்கமான ஒன்றாகி விட்ட்டது. அவற்றில் சில நடைமுறையில் சாத்தியம் இல்லாத வகையிலும், அரசின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. மக்கள் வரிப்பணத்தில் இலவசங்கள் தருவதாக அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி வைத்து, அக்கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

அவர் தனது பொது நலன் மனுவில், தேர்தலை மையமாக வைத்து இலவசங்கள் திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்கும் அரசியல் கட்சிகளின் சமீபத்திய போக்கு ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என கூறியுள்ளார். மேலும், இந்த செயல் ஆட்சியில் நீடிக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும், மக்களின் வரிப்பணத்தை வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போன்றது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். தேர்தல் சமயத்தில் இலவசங்களை தருவதாக அரசியல் கட்சிகள் கூறுவது அரசியலமைப்புக்கு விரோதமானது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | Election: இந்த ஏழு மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடக்கலாம்?

இந்த  பொது நலன் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “இது மிகவும் தீவிரமான பிரச்னை. சட்டரீதியாக இதனை எப்படி தடுப்பது என்பதை நீதிமன்றம் அறிய விரும்புகிறது. தேர்தலின்போது இலவசத் திட்டங்கள் அறிவிப்பை தடுப்பது எப்படி என்பது தொடர்பான வழிமுறைகளை மத்திய அரசு ஆராய வேண்டும். எதிர்வரும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலேயே இதனை அமல்படுத்த முடியுமா என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். இலவசங்களை திட்டங்களுக்கான பட்ஜெட், பொது  பட்ஜெட்டைக் காட்டிலும் கூடுதலாக செல்லும் நிலையில், அடுத்த தேர்தலில் இந்த நடைமுறை நீடிக்கக் கூடாது” என்றார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை ஆகஸ்ட் 3ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க | 2 மத்திய அமைச்சர்கள் ஒரே நாளில் ராஜினாமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News