IND vs PAK: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் (ICC Champions Trophy 2025) கடந்த பிப்.19ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் முறையே பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி தங்களின் வெற்றிக் கணக்குகளை தொடங்கியிருக்கின்றன. 4ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
IND vs PAK: இந்தியா - பாகிஸ்தான்... வெற்றி யாருக்கு?
அந்த வகையில், குரூப் சுற்று போட்டிகளிலேயே மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு (India vs Pakistan) இடையிலான போட்டி நாளை துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து வரும் ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணியை, சற்று பலவீனமாக காட்சியளிக்கும் முகமது ரிஸ்வான் (Mohammed Rizwan) தலைமையிலான பாகிஸ்தான் அணி எதிர்கொண்டு வெற்றி பெறுமா என்ற கேள்வி உலகளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் கேள்வியாக உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போட்டி பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் இந்திய அணியின் (Team India) கையே ஓங்கியிருப்பதை பார்க்க முடிகிறது. பாகிஸ்தான் தான் (Team Pakistan) இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது என்றாலும் அந்த அணி இந்திய அணியை எதிர்கொள்ள துபாய் வருவதும் அந்த அணிக்கு சற்றே பின்னடைவுதான. இந்திய அணியினர் எங்கும் பயணிக்க தேவையில்லை எனலாம். இருப்பினும், கிரிக்கெட் களத்தில் அன்றைய தினம் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, யார் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசுகிறதோ அவர்களே வெற்றிவாகை சூட முடியும் என்பதையும் மறுக்க இயலாது.
IND vs PAK: விராட் கோலியின் மோசமான ஃபார்ம்
இந்தச் சூழலில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும், அதை விட ஒருபடி அதிக எதிர்பார்ப்பு விராட் கோலி மேல் உள்ளது எனலாம். கடந்த காலங்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி அளவிற்கு சிறப்பாக விளையாடிய வீரர் யாரும் இல்லை எனலாம். இருப்பினும், தற்போதைய அவரது ஃபார்ம் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. 2023 உலகக் கோப்பை தொடர், 2024 டி20 உலகக் கோப்பை தொடர் இரண்டிலும் விராட் கோலி சொற்பமான ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.
IND vs PAK: விராட் கோலியின் வில்லன்கள்
நசீம் ஷா, ஷகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்கள் விராட் கோலிக்கு பெரியளவில் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என பார்க்கப்பட்ட நிலையில், அப்ரார் அகமது, குஷ்தில் ஷா ஆகியோரே தற்போது விராட்டுக்கு பெரிய வில்லன்களாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. காரணம், கடந்த சில இன்னிங்ஸ்களில் விராட் கோலி (Virat Kohli) தொடர்ந்து லெக் ஸ்பின்னர்களுக்கு ஆட்டமிழந்து வருகிறார். இங்கிலாந்து ஓடிஐ தொடரில் அடில் ரஷித், வங்கதேச அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ரிஷாத் ஹோசைன் என அடுத்தடுத்து லெக் ஸ்பின்னர்களிடம் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார்.
IND vs PAK: விராட் கோலி என்ன செய்யப்போகிறார்?
அப்படியிருக்க, வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்த உடன் அப்ரார் அகமது, குஷ்தில் ஷா ஆகியோர் தங்களின் தாக்குதலை தொடங்கிவிடுவார்கள். இவர்களுக்கு எதிராக விராட் கோலி என்ன செய்யப்போகிறார் என்பதே பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அவர் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை விளையாடி பெரியளவில் பழக்கமில்லாதவர். அவர் கிரீஸில் இருந்து இறங்கி வந்து விளையாடுவதும் குறைவு. அப்படியிருக்க, லெக் ஸ்பின்னர்கள் அவருக்கு எதிராக அடிப்படையான வியூகத்தை அமைத்தே விக்கெட்டை கைப்பற்றி விடுகின்றனர் என கிரிக்கெட் வல்லுநர் Pdogg தொடங்கி, சமூக வலைதள விமர்சகர்கள் வரை கருத்துக் கூறி வருகின்றனர்.
IND vs PAK: விராட் கோலி இதை செய்தால் போதும்... அஸ்வின் அட்வைஸ்
இந்நிலையில், விராட் கோலி மீதான இந்த கருத்துகளுக்கு பதிலளிக்கும் வகையிலும், பாகிஸ்தான் அணி பந்துவீச்சுக்கு எதிராக விராட் கோலி செய்ய வேண்டியவை குறித்தும் அஸ்வின் (Ravichandran Ashwin) அவரது யூ-ட்யூப் சேனலில் பேசி உள்ளார். இதுகுறித்து அஸ்வின் பேசியதாவது,"விராட் கோலி தன் மீதே அதிக அழுத்தத்தை போட்டுக்கொள்கிறார். பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்க்க வேண்டும் என அவர் நினைக்கிறார் போல... ஆனால், என்னைப் பொறுத்தவரை விராட் கோலி களத்தில் இறங்கும்போது காலரை தூக்கிவிட்டுவிட்டு, விவ் ரிச்சர்ட்ஸ் பப்பிள் கம்மை மென்றுகொண்டே வருவதுபோல், இவரும் கூலாக உள்ளே வந்து அதிரடியாக இரண்டு, மூன்று பவுண்டரி ஷாட்களை விளையாடினாலே போதும்.
அவர் தன் மீது அதிக அழுத்தத்தை கொடுக்கிறார். அவர் ஸ்வீப் ஷாட் உள்ளிட்ட ஷாட்களை அடிக்கும் திறன் கொண்டவர்தான். அவர் தான் அவுட்டாவதை பற்றி யோசிக்காமல் கூலாக விளையாடினால் போதும். விராட் கோலி சர்வதேச அளவில் அனைத்தையும் செய்துவிட்டார், இனி அவர் நிரூபிக்க வேண்டியது என்று எதுவுமில்லை. எனவே என்னை பொறுத்தவரை அவர் கூலாக களத்தில் இறங்கி அதிரடி காண்பித்தால், அழுத்தமின்றி விளையாடினாலே போதுமானது. அவரது ரசிகர்கள் உள்பட அனைவருக்கும் விராட் கோலி பேட்டிங் செய்வதை பார்க்க வேண்டும் என்பதுதான் ஆசையாக உள்ளது. அவ்வளவுதான்" என்றார். அஸ்வின் சொல்வதும் ஏற்றுக்கொள்ளும் வகையிலேயே உள்ளது. இதனை கிங் கோலி பின்பற்றி தைரியமாக விளையாடி அவுட்டாகி சென்றாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம்தான்.
மேலும் படிக்க | அடிக்கு மேல் அடி.. பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுத்த ஐசிசி.. என்ன நடந்தது?
மேலும் படிக்க | கார் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய கங்குலி.. நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ