டெல்லி தேர்தல் 2025: AAP VS BJP - அதி முக்கியமான 5 தொகுதிகள்... ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார்?

Delhi Election 2025: டெல்லி சட்டப்பேரவை 2025 தேர்தலில் ஆம் ஆத்மி - பாஜக மோதும் அதி முக்கியத்துவம் பெறும் 5 தொகுதிகள் குறித்தும், அங்கு போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் குறித்தும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 4, 2025, 02:04 PM IST
  • டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள் உள்ளன.
  • நாளை (பிப். 5) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • பிப். 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
டெல்லி தேர்தல் 2025: AAP VS BJP - அதி முக்கியமான 5 தொகுதிகள்... ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார்? title=

Delhi Election 2025, AAP vs BJP Top 5 VIP Seats: 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (பிப். 4) ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. டெல்லியில் கடந்த 1993ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

அதில், முதல் சட்டப்பேரவை தேர்தலில் மட்டுமே பாஜக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அந்த ஆட்சிக் காலத்தில் மதன் லால் குரானா, சாகிப் சிங் வர்மா, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் முதல்வர்களாக இருந்தனர். அடுத்து 1998, 2003, 2008 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. அந்த 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஷீலா தீட்சித் முதல்வராக இருந்தார். பின்னர், 2013ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இருப்பினும், 49 நாள்களில் லோக் பால் மசோதா நிறைவேற்ற முடியாத காரணத்தால் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக அடுத்த ஜனாதிபதி ஆட்சி டெல்லியில் அமலானது.

தொடர்ந்து, 2015, 2020 சட்டப்பேரவை தேர்தல்களிலும் ஆம் ஆத்மி கட்சியே வெற்றி பெற்றது. கடந்தாண்டு வரை அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தார். மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தபோதும் அவரே முதல்வராக தொடர்ந்தார். பின்னர் பிணையில் வெளிவந்ததும் அவர் தனது முதல்வர் பதவியில் இருந்து விலகினார். வரும் 2025 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற பின்னரே முதல்வர் நாற்காலியில் மீண்டும் அமர்வேன் என சபதமேற்றுள்ளார். தற்போது ஆம் ஆத்மியின் அதிஷி மெர்லினா முதலமைச்சராக இருந்து வருகிறார்.

மேலும் படிக்க | ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு! அரவிந்த் கெஜ்ரிவாலின் 15 உத்தரவாதங்கள்!

மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சியும், 27 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டனர். மறுபுறம், டெல்லியில் பலமிழந்து காணப்படும் காங்கிரஸ் கட்சியும் மூன்றாவது கட்சியாக போட்டியில் நீடித்து வருகிறது. எனவே, இந்த முறை டெல்லி சட்டப்பேரவை யார் கைகளுக்கு போகப்போகிறது என்ற ஆவல் நாடு முழுவதும் உள்ள மக்களிடம் உள்ளது. டெல்லியின் 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வரும் பிப். 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

அந்த வகையில், இந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் டாப் 5 தொகுதிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.

டெல்லி தேர்தல் 2025: புது டெல்லி தொகுதி

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடும் தொகுதி. இங்கு தொடர்ந்து 3 முறை வென்றுள்ள கெஜ்ரிவால், 4வது வெற்றிக்கு குறிவைத்துள்ளார். பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் சாகிப் சிங் வர்மாவின் மகனான பர்வேஷ் வர்மா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் ஷீலா திட்சீத்தின் மகன் சந்தீப் தீட்சித் ஆகியோர் புது டெல்லி தொகுதியில் போட்டியிடுகின்றனர். கடந்த முறை கெஜ்ரிவால் 21 யிரத்து 687 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

டெல்லி தேர்தல் 2025: ஜங்புரா தொகுதி

முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களுள் ஒருவர் மணீஷ் சிசோடியா இங்கு போட்டியிடுகிறார். ஜங்புரா தொகுதியில் மணீஷ் சிசோடியா போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும். கடந்த 2015 மற்றும் 2020 தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரவீன் குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். இங்கு  இந்த முறை சிசோடியாவை எதிர்த்து பாஜகவின் சர்தார் தர்விந்தர் சிங் மர்வா மற்றும் காங்கிரஸின் ஃபர்ஹாத் சூரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும் படிக்க | 'நாம் சீனாவிற்கு தான் வரி கட்டுகிறோம்' - மத்திய அரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி!

டெல்லி தேர்தல் 2025: கல்காஜி தொகுதி

தற்போதைய முதலமைச்சர் அதிஷி மெர்லினா போட்டியிடும் தொகுதி இதுதான். கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தலில் மெர்லினா 11,393 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றிருந்தார். இம்முறை காங்கிரஸின் சார்பில் அல்கா லம்பா இங்கு போட்டியிடுகிறார். இவர் மகிளா காங்கிரஸின் தலைவர் ஆவார். மேலும், முன்னாள் பாஜக எம்பி ராமேஷ் பிதூரியும் இங்கு போட்டியிடுகிறார்.

டெல்லி தேர்தல் 2025: சத்தர்பூர் தொகுதி

கடந்த தேர்தலில் இங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் கர்தார் சிங் தன்வார் போட்டியிட்டு வென்றார். ஆனால், அவர் பாஜகவுக்கு தாவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, இந்த முறை பிரம் சிங் தன்வார் போட்டியிட்டுள்ளார். பாஜக சாப்பில் கர்தார் சிங் தன்வார் களம் கண்டுள்ளார். காங்கிரஸ் ராஜேந்தர் சிங் தன்வார் என்பவரை களமிறக்கி உள்ளது. எனவே இங்கு தன்வார்கள் இடையே தான் போட்டியே...

டெல்லி தேர்தல் 2025: மால்வியா நகர்

இங்குதான் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் சோம்நாத் பாரதி போட்டியிடுகிறார். கடந்த மூன்று தேர்தல்களாக இங்கு சோம்நாத் பாரதியே வெற்றி பெற்றிருக்கிறார். இந்த முறையும் அவரே போட்டியிட்டு நான்காவது வெற்றிக்கு காத்திருக்கிறார். இவரை எதிர்த்து பாஜக சார்பில் சதீஷ் உபாத்யாய் மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜிதேந்திர குமார் கோச்சார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சி vs பாஜக

இந்த 5 தொகுதிகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவும். இவை மட்டுமின்றி கடந்த 3 தேர்தல்களாக மணீஷ் சிசோடியோ போட்டியிட்டு வென்ற பட்பர்கஞ்ச் தொகுதி, பணமோசடி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சரும், ஆம் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்திர ஜெயின் ரபோட்டியின் ஷகுர்பஸ்தி தொகுதி, சாந்தினி சௌக் பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் இருக்கும் பல்லிமாரன் தொகுதி ஆகியவையும் முக்கிய தொகுதிகளாக பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க | ரூ.10 லட்சம் வரை காப்பீடு... மகள் கல்யாணத்திற்கு ரூ.1 லட்சம் - குஷியில் ஆட்டோ டிரைவர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News