ஐபிஎல் 2025 மார்ச் மாதம் தொடங்க உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு பாப் டூ பிளசிஸ் கேப்டனாக இருந்தார். ஆனால் இந்த ஆண்டு ஏலத்தில் அவரை மீண்டும் அணியில் எடுக்க தவறியது ஆர்சிபி.
இதனால் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆர்சிபி நிர்வாகம் உள்ளது. விராட் கோலி மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் செய்திகள் வெளியாகி வருகிறது.
2011 முதல் 2023 வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டார் விராட் கோலி. கிட்டத்தட்ட 143 ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபிக்கு கேப்டனாக இருந்துள்ளார். 2016ம் ஆண்டு அணியை பைனலுக்கும் அழைத்து சென்றார்.
சமீபத்திய பேட்டியில் ஆர்சிபி அணியின் COO ராஜேஷ் மேனன், ஐபிஎல் 2025ல் யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்ற கேள்விக்கு, இன்னும் நாங்கள் அதனை முடிவு செய்யவில்லை. 4 முதல் 5 பேரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. விரைவில் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும்" என்றார்.
எங்களுக்கு என்ன மாதிரியான வீரர்கள் வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அதனை மனதில் வைத்து அணியை எடுத்துள்ளோம். இந்த முறை பவுலிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி உள்ளோம் என்று மேலும் தெரிவித்துள்ளார் ராஜேஷ் மேனன்.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி பில் சால்ட், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், ரொமாரியோ ஷெப்பர்ட் போன்ற வீரர்களை எடுத்துள்ளனர்.