டெல்லி சட்டமன்ற தேர்தலில், பாஜக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை கட்சித் தொண்டர்களைப் பாராட்டி, பாஜக தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற இலக்கை அடைய ஒரு முதன்மை மாநிலமாக தில்லியின் வளர்ச்சிக்காக தனது கட்சி பாடுபடும் என்றும் அவர் உறுதியளித்தார்.
"மனித சக்தி மகத்தான சகதி! வளர்ச்சிப்பணி வென்றது, நல்லாட்சி வென்றது" என்று பிரதமர் மோடி X தள பதிவில் கூறினார். பாஜக வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது என பதிவிட்டுள்ளர்.
டெல்லி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், பாஜகவின் இந்த மகத்தான வெற்றி மற்றும் வரலாற்றுத் தீர்ப்புக்காக டெல்லியின் எனது அன்பான சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மக்களின் ஆசீர்வாதங்களைப் பெறுவதில் நாங்கள் பணிவுடன், பெருமைப்படுகிறோம்" என்று மேலும் கூறினார்.
பின்னர் பிரதமர் டெல்லியின் வளர்ச்சிக்காக பாஜக உறுதியாக பாடுபடும் என்று வலியுறுத்தினார். "டெல்லி வளர்ச்சிப் பணியிலும், மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதிலும் டெல்லிக்கு முக்கிய பங்கு இருப்பதை உறுதி செய்வதிலும் நாங்கள் எல்லா வகையிலும் முயல்வோம்ன என்பது எங்கள் உத்தரவாதம்" என்று அவர் கூறினார்.
பின்னர் அவர் களத்தில் பணியாற்றிய பாஜக தொண்டர்களைப் பாராட்டினார், இது வெற்றிக்கு முக்கிய காரணியாகக் குறிப்பிட்டார். "இந்த மகத்தான வெற்றிக்காக இரவும் பகலும் உழைத்த பாஜகவின் அனைத்துத் தொண்டர்களையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்போது நாங்கள் டெல்லி மக்களுக்கு சேவை செய்வதில் இன்னும் உறுதியாக அர்ப்பணிப்புடன் இருப்போம்" என்று பிரதமர் கூறினார்.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது. இதில் 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் . தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.
மேலும் படிக்க | அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த பாஜக வேட்பாளர்! யார் இந்த பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா?
மேலும் படிக்க | டெல்லியில் மலரும் தாமரை.. ஆம் ஆத்மி கோட்டை விட்டது எங்கே? ஓர் அலசல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ