இயல்பான நிலையில் இருந்து மீண்டும் மோசமான நிலைக்கு சென்ற டெல்லியில் காற்றின் தரம்!!
டெல்லி: தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியின் காற்று மாசு இயல்பான நிலையில் இருந்து மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. காற்றின் தர மதிப்பீடு நேற்று 357 புள்ளிகளாக இருந்த நிலையில் இன்று 218 ஆக குறைந்தது. புறநகர்ப் பகுதிகளான ஃபரிதாபாத், காசியாபாத்,நொய்டா, குருகான் போன்ற இடங்களிலும் மாசு நிலையில் சரிவு காணப்பட்டது.
ஆயினும் காற்று அபாயகரமான நிலையில் நீடித்ததால் பொதுமக்களில் ஏராளமானோர் முக கவசம் அணிந்து சென்றனர். பயிர்க் கழிவுகளை எரித்தல் சற்றே குறைந்துள்ள நிலையில், காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் மாசு அளவு குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தற்போது, டெல்லியில் உள்ள AQI குறியீடு 221 ஆக பதிவு செய்யப்பட்டது. இது 'மிகவும் மோசமான நிலையில்' பிரிவில் அடங்கும். 51 முதல் 100 வரையான AQI திருப்திகரமாக கருதப்படுகிறது; 101-200 மிதமானது; 201-300 மோசமான பிரிவின் கீழ் வருகிறது. 300-400 'மிகவும் மோசமானது' என்று கருதப்பட்டாலும், 401-500 க்கு இடையிலான நிலைகள் 'அபாயகரமான வகையின்' கீழ் வருகின்றன.
லோதி சாலை பகுதியில் பி.எம் 2.5 எண்ணிக்கை 218 ஆகவும், பி.எம் 10 கடுமையான பிரிவில் 217 ஆகவும் இருந்தது. நொய்டாவிலும், பிரிவு 62 பகுதியில் AQI 'மோசமான நிலை' பதிவு செய்யப்பட்ட நிலையில் நிலைமை அப்படியே இருந்தது. IIN குருகிராம், NISE குவால் பஹாரி பகுதியில் 301 என்ற இடத்தில் AQI 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்தது.