குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தலுக்கான 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று நடந்துக்கொண்டு இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் வந்தார். அங்கு ரேனிப் என்ற இடத்தில் வாக்குச்சாவடி எண் 115-ல், பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் வருசையில் நின்று வாக்களித்தார்.
அவர் வாக்களித்து விட்டு திரும்பும் போது.. வெளியில் நின்றிருந்த மக்கள் மோடி..மோடி என குரல் எழுப்பினார்கள். அவர்களை பார்த்து கை அசைத்த வண்ணம் வானகத்தில் சென்றார்.
இதையடுத்து பிரதமர் மோடி தேர்தல் விதி மீறலில் ஈடுபட்டதாக காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் மோடிக்கு எதிராக புகார் அளித்துள்ளது.
வீடியோ:
#WATCH Ahmedabad: PM Narendra Modi leaves after casting his vote at booth number 115 in Sabarmati's Ranip locality. #GujaratElection2017 pic.twitter.com/cRqbmApgMv
— ANI (@ANI) December 14, 2017