Gujarat New CM: குஜராத் மாநில புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் நியமனம்

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாஜக சட்டமன்ற கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.   

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 12, 2021, 05:35 PM IST
  • குஜராத் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார்
  • சட்டமன்ற கட்சி கூட்டம் காந்திநகரில் நடைபெற்றது
  • குஜராத் முதல்வர் விஜய் ரூபானி சனிக்கிழமை பதவியை ராஜினாமா செய்தார்
Gujarat New CM: குஜராத் மாநில புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் நியமனம் title=

காந்திநகர்: குஜராத் மாநில புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் மாநிலம் கடலோடியா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ, பூபேந்திர படேல், கட்சியின் சட்டமன்றக் கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதன்பொருள், குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் இருப்பார்.

இன்று (செப்டம்பர் 12, 2021) 3 மணிக்கு காந்திநகரில், பாஜக சட்டப்பேரவை கட்சியின் கூட்டம் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கலந்தாலோசனை நடத்தினார்கள். 

கட்சியின் குஜராத் மாநில தலைவர் சி.ஆர்.பாட்டீல், தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி (Vijay Rupani) , துணை முதலமைச்சர் நிதின் படேல், கட்சியின் தேசியக் குழுவின் மேற்பார்வையாளர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹ்லாத் ஜோஷி மற்றும் தருண் சுக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். 

ALSO READ | குஜராத்தில் பாஜக சட்டமன்ற கட்சிக் கூட்டம்; முதலமைச்சராக யாருக்கு வாய்ப்பு?

பூபேந்திர படேல் 
பூபேந்திர படேல் குஜராத்தின் கட்லோடியா சட்டமன்றத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ ஆவார். இதற்கு முன்னதாக, அகமதாபாத் நகர மேம்பாட்டு ஆணையத்தின் (AUDA) தலைவராக இருந்தார் பூபேந்திர படேல். அகமதாபாத் மாநகராட்சி (AMC) நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

குஜராத்தின் புதிய முதல்வருக்கான பட்டியலில் நிதின் படேல், மன்சுக் மாண்டவியா மற்றும் புருஷோத்தம் ரூபாலா ஆகிய மூன்று தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் வழக்கம் போல், பாஜக மீண்டும் ஆச்சரியத்தையே கொடுத்தது. பட்டியலில் இருந்த மூன்று தலைவர்களையும் விடுத்து, பூபேந்திர படேலுக்கு குஜராத் மாநில ஆட்சிப் பொறுப்பை கட்சி கொடுத்துள்ளது.  

முன்னதாக, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி (Vijay Rupani) , நேற்று ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத்தை சந்தித்து தனது ராஜினாமாவை சமர்ப்பித்தார். 

இதற்கிடையில், முதல்வர் விஜய் ரூபானியின் திடீர் ராஜினாமாவுக்கு எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் கட்சிக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. குஜராத், உ.பி., மத்திய பிரதேசம், அசாம் அல்லது ஹரியானா என அனைத்து இடங்களிலும் இதே நிலைமை தான் எனக் கூறியுள்ளார்.

ALSO READ | BREAKING! CM Resignation: குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News