59 சீன செயலிகள் தடை செய்யப்பட்ட பின்னர் இந்தியாவில் 200 புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் கூறுகிறார்.
புதுடெல்லி(New Delhi): சில நாட்களுக்கு முன், தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நரேந்திர மோடி தலைமையிலான அரசு, TikTok உட்பட 59 சீன செயலிகளை தடை செய்தது. அதன் பின்னர், உலகின் உலகின் நம்பர் ஒன் மொபைல் போன் உற்பத்தி மையமாக இந்தியா உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு செயல்பட்டு வருவதாக கூறிய, மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Union IT Minister Ravi Shankar Prasad), நாட்டில் தற்போது 200 புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்தியாவில் செயலிகளுக்கான சந்தையில் உள்நாட்டினருக்கு சிறந்த வாய்ப்புகள் உள்ளன.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், இந்தியர்களின் தரவுகளை வெளிநாட்டினர் திருட அனுமதிக்க முடியாது என்றும், அரசு அதன் இறையாண்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் கூறினார். நாடாளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவால் ஆராயப்பட்டு, தரவுகள் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது என்றும் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.
ALSO READ | வெட்கப்படுகிறோம், வேதனைப்படுகிறோம்: மன்னிப்பு கேட்ட Twitter..!!!
எலக்ட்ரானிக் உற்பத்தித் துறை பற்றி கூறிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர், 2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் இரண்டு மொபைல் உற்பத்து யூனிட்டுகள் மட்டுமே இருந்தன, ஆனால் இப்போது அந்த எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது என்றார். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மொபைல் உற்பத்தி மையமாக மாறிவிட்டது என்று அவர் கூறினார். "சீனா மிகப்பெரிய மொபைல் உற்பத்தி மையமாக முதலிடத்தில் உள்ளது. அந்த நிலையை மாற்றி, இந்தியாவை முதலிடத்திற்கு உருவாக்குவதே அரசின் நோக்கம் என அமைச்சர் மேலும் கூறினார்.
இந்தியா - சீனா இடையில் எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, சீனாவுடன் வர்த்தகத்தை குறைக்கவேண்டும், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இந்தியாவில் வலுவடைந்து வந்தன.
ALSO READ | வீடியோவில் விசிட் ..வாட்ஸ் அப்பில் டீல்…. கைக்கு வந்தது தீவு…!!!
அதை அடுத்து, இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படும் சீன நிறுவனங்களின், டிக்டாக் ஹலோ, உட்பட 59 செயலிகளை தடைசெய்வதாக இந்திய அரசு, கடந்த மாதம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.