சிறந்த கல்வி நிறுவனங்களில், சிறந்த பாடதிட்டங்களை கட்டணம் இன்றி இலவசமாக படிக்க நல்ல வாய்ப்பு. SWAYAM போர்ட்டலில் IIM வழங்கும் 10 இலவச படிப்புகள் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வி அமைச்சகத்தின் ஆன்லைன் தளமான SWAYAM மூலம், யார் வேண்டுமானாலும் சேரக்கூடிய பல இலவச பாடதிட்டங்களை வழங்குகிறது. இந்த தளம் பல்வேறு துறைகளில் IIM போன்ற முன்னணி நிறுவனங்களின் பாடதிட்டங்களை வழங்குகிறது.
IIM போன்ற சிறந்த நிறுவனங்கள் எப்போதும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருந்து வருகின்றன, அவர்கள் கல்வி ரீதியாக மேம்படுத்திக் கொள்ளவும், முக்கியமான தொழில் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் உதவும் பாட திட்டங்களை வழங்குகின்றன.
ஸ்வயம் போர்ட்டலில் பொறியியல், வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் IIM போன்ற முன்னணி நிறுவனங்களின் கீழ்கண்ட பாடதிட்டங்களில் இலவசமகா சேர்ந்து கற்கலாம்.
1. மூலோபாய நிதி மேலாண்மை (Strategic Financial Management)
நிதி அறிக்கைகள், மதிப்பீடு, முதலீட்டு முடிவுகள், நிறுவன இடர் மேலாண்மை, இணைப்புகள், கையகப்படுத்துதல் மற்றும் நிறுவன நிர்வாகம் பற்றி அறிய இந்த பாடதிட்டம் உதவும்.
2. கணக்கியலில் செயற்கை நுண்ணறிவு (AI in Accounting)
பாரம்பரிய கணக்கியல் நடைமுறைகளை மாற்றும் வகையில், கணக்கு வழக்குகளை பராமரித்தல், நிதி பகுப்பாய்வு மற்றும் மூலோபாய திட்டமிடல் ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் பங்கை அறிந்து கொள்ள இந்த பாடதிட்டம் உதவும்.
3. வங்கி மற்றும் நிதிச் சந்தைகள் (Banking and Financial Markets)
ஒரு இடர் மேலாண்மைக் கண்ணோட்டம்: பணப்புழக்கம், இடர் மேலாண்மை மற்றும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் உட்பட வங்கி மற்றும் நிதிச் சந்தைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை ஆராய்கிறது.
4. வங்கி மற்றும் காப்பீடு (Banking and Insurance)
வங்கி செயல்பாடுகள், RBI விதிமுறைகள், டிஜிட்டல் வங்கி, காப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கிய பாடதிட்டம் இது.
5. மேம்பட்ட தயாரிப்பு தர திட்டமிடல் (APQP)
தயாரிப்புகளுக்கான APQP (Advanced Product Quality Planning) திட்டமிடலின் குறிக்கோள்கள், பின்னணி, இணக்கம் மற்றும் அதன் நான்கு கட்டங்கள் மற்றும் ஐந்து முக்கிய செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள இந்த பாடதிட்டம் உதவும்.
6. நிறுவன நடத்தை ( Organizational Behaviour)
நிறுவனங்களில் தனிநபர் மற்றும் குழு நடத்தை குறித்த ஒரு வழக்கு அடிப்படையிலான பாடநெறி, கற்பவர்களுக்கு பணியிட இயக்கவியலைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
7. B2B சந்தைப்படுத்தல் (B2B Marketing)
சமச்சீர் மதிப்பெண் அட்டைகள் மற்றும் மூலோபாய வரைபடங்களைப் பயன்படுத்தி வணிக சந்தைப்படுத்தல் உத்திகள், வாடிக்கையாளர் பகுப்பாய்வு, திட்டமிடல் மற்றும் செயல்திறன் அளவீடு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடதிட்டம் இது.
8. செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல் (Cost and Management Accounting)
செலவு மற்றும் மேலாண்மை கணக்கியல் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய அடிப்படை புரிதலை இந்த பாடதிட்டங்கள் வழங்குகிறது.
9. வணிகத் தொடர்பு (Business Communication Essentials)
ஒரு வணிக அமைப்பில் பயனுள்ள தொடர்பு, பொதுப் பேச்சு, தொழில்முறை எழுத்து மற்றும் தொடர்பு திறன்களை மேம்படுத்திக் கொள்ள இந்த பாடத் திட்டம் வழங்குகிறது.
10. வணிக நெறிமுறைகள் மற்றும் நிறுவன நிர்வாகம்
பொறுப்பான முடிவெடுப்பதற்காக வணிகங்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளில் உள்ள நெறிமுறை சவால்களை பற்றிய அடிப்படை புரிதலை இந்த பாடதிட்டங்கள் வழங்குகிறது.
மேலும் படிக்க | இந்தோனேஷியா முதல் ஹங்கேரி வரை... ரூபாயின் மதிப்பு அதிகம் உள்ள சில நாடுகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ