உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பதால், எலும்புகளுக்கு இடையில், யூரிக் அமிலம் படிந்து, மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலி அதிகரிக்கிறது. கீழ்வாத பிரச்சனையும் ஏற்படுகிறது. நாம் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, அதன் மூலம் வெளியாகும் ப்யூரி என்ற ரசாயனம் முறியும்போது யூரிக் அமிலம் என்ற கழிவு பொருள் வெளியாகிறது. சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை வடிகட்டி வெளியேற்றினாலும், அது அளவிற்கு அதிகமாக ஆகும் போது, அது வெளியேறாமல் மூட்டுகளுக்கு இடையில் தங்கிவிடும்.
யூரிக் அமிலம்
ஆரோக்கியமான ஒரு நபரின் உடலில் ஒரு டெசி லிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லி கிராம் அளவு யூரிக் அமிலம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அளவைவிட யூரிக் அமிலம் உடலில் அதிகரிக்கும் போது பல உடல் நல பிரச்சனைகள் (Health Tips) ஏற்படுகின்றன. யூரிக் அமிலத்தை குறைக்க, நாம் உணவுப் பழக்க வழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் வெங்காயத்தின் மூலம் எவ்வாறு யூரிக் அமிலத்தை குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
யூரிக் அமிலமும் வெங்காயமும்
வெங்காயம் குறைந்த அளவு ப்யூரின் கொண்ட உணவு. அந்த வகையில் யூரிக் அமிலத்தை குறைக்க இது மிகவும் உதவிகரமாக இருக்கும். கீழ் வாதத்தினால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கவும் வெங்காயம் உதவும். இதற்கு காரணம் வெங்காயத்தில் காணப்படும் குர்செடின் என்ற பிளவனாய்டு, பியூரின் செரிமானத்தை தூண்டி, யூரிக் அமிலம் ஏற்படாமல் தடுக்கும். மேலும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கும் நன்மை பயக்கும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் காலையில் இந்த 3 பால் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது!
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெங்காயத்தை சாப்பிடும் சரியான முறை
யூரின் அமிலத்தை கட்டுப்படுத்த வெங்காயத்தை பல வழிகளில் சாப்பிடலாம் என்றாலும், சரியான வகையில் உட்கொள்வதால், பலன்கள் சிறப்பாக இருக்கும். யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த வெங்காயத்தை சமைத்து சாப்பிடுவதை விட வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது பலன் அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெங்காயத்தை சாலட் ஆக சாப்பிடுவது சிறந்தது. வெங்காயத்தைச் சார் எடுத்து குடிப்பதும், கியூரிகளை ஜீரணிக்க உதவும்.
ஆஸ்டியோபரோசிஸ் நோயாளிகளுக்கும் நன்மை அளிக்கும் வெங்காயம்
எலும்புகள் பலவீனம் அடைவதால் ஏற்படும் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் பிரச்சனை உள்ளவர்களும் வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது பலன் அளிக்கும். இதனால் எலும்புகள் வலுவாகி, வலிகளில் இருந்து விடுபடலாம்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்த உதவும் பழங்கள்
யூரிக் அமில பிரச்சனையிலிருந்து விடுபட புளிப்பு மிக்க பழங்கள் சாப்பிடுவதும் நல்ல பலன் கொடுக்கும். அன்னாசி பழம், திராட்சை பழம், எலுமிச்சை, நெல்லிக்காய் போன்ற பழங்கள் யூரிக் அமில அளவை குறைப்பதில் சிறந்தவை. இவற்றில் உள்ள வைட்டமின் சி, மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, யூரிக் அமில பிரச்சனையையும் தீர்க்கிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ