Lung cancer Symptoms, Treatment Tamil | நுரையீரல் புற்றுநோய் (Lung Cancer) பெரும்பாலும் புகைபிடிப்பவர்களில் காணப்படுவது போல் தெரிந்தாலும், தற்போது புகைபிடிக்காதவர்களிடமும் இந்த நோய் அதிகரித்து வருகிறது. இது மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
நுரையீரல் புற்றுநோய் காரணங்கள்:
காற்று மாசுபாடு:
காற்று மாசுபாட்டின் முக்கிய காரணிகள் PM 10 மற்றும் PM 2.5 துகள்கள் ஆகும். இவை நமது நுரையீரலுக்குள் சென்று, நுரையீரலை சேதப்படுத்துகின்றன. இந்த துகள்கள் தொழிற்சாலைகள், அதிக போக்குவரத்து பயன்பாடு உள்ள இடங்களில், குறிப்பாக நகரங்களில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டில் காணப்படுகின்றன. நீங்கள் புகை பிடிக்காதவர்களாக இருந்தாலும், இந்த வகையான காற்று மாசுபாடு உங்கள் உடலில் பாதிப்பை ஏற்படுத்தி, நீண்ட காலத்திற்கு பின்பு நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும்.
தொழில்துறை மாசுபாடு: தொழிற்சாலைகளில் வெளியாகும் மாசுபாடுகள், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுத்த முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
மரபணு மாற்றம்: சில குறிப்பிட்ட மரபணு மாற்றங்களும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்த முடியும். பெண்களிடத்தில், புகைபிடித்தல் இல்லாமல் இருந்தாலும், மரபணு மாற்றங்களால் இந்த நோய் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சமையல் புகை: கிராமப்புறங்களில், பெண்கள் அடுப்புகளில் சமைக்கும்போது வெளியேறும் புகையும் நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நுரையீரல் புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்:
இருமல்: சில காலமாக தொடரும் இருமல்.
மூச்சுத் திணறல்: அடிக்கடி மூச்சுத் திணறுவது.
சளி: சளியில் இரத்தம் வருதல்.
சிறிது நடந்த பிறகு மூச்சுத் திணறல்: அதிகமாக அல்லது உடற் பயிற்சிக்கு பிறகு மூச்சுத் திணறல்.
தலைவலி: நுரையீரல் புற்றுநோய் மேலும் பரவினால் தலைவலியும் ஏற்படும்.
எலும்பு வலி, பசியின்மை, எடை இழப்பு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
நுரையீரல் புற்றுநோயை குணப்படுத்த முடியுமா?
பெண்களுக்கு ஏற்பட்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையில் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். இதில் இலக்கு சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்களில் புகைப்பிடிக்காதவர்களுக்கு இந்த நோய் வந்தாலும் ஆரம்பத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. ஒருவேளை புகைப்பிடிப்பவராக இருந்து அவரின் டி.என்.ஏ (DNA) சேதமாகி புற்றுநோய் ஏற்படுகிறது என்றால் சிகிச்சை தீவிரம் அதிகமாக இருக்கும். ஆபத்தும் அதிகமாக இருக்கும். இருப்பினும் தாமதிக்காமல் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ஓட்ஸை நைட் ஊறவைத்து... காலையில் இப்படி சாப்பிடுங்க - தொப்பை பட்டுனு கரையும்!
மேலும் படிக்க | ஆண்களின் அழகை கெடுக்கும் குடல் அசுத்தம்... காரணமும் தீர்வும் முழு விவரம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ