மன அழுத்தம் முதல் கொலஸ்ட்ரால் வரை... ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்த பிரிஞ்சி இலை கை கொடுக்கும்

நமது சமையலில் அன்றாடம் பயன்படுத்தும் சில மசாலா பொருட்கள், உணவிற்கு சுவையையும் மணத்தையும் கொடுக்கின்றன. எனினும் இவற்றில் மருத்துவ குணங்கள் பல நிறைந்துள்ளது.

குருமா, பிரியாணி, புலாவ் போன்ற உணவுகளை தயாரிக்கும் போது, நாம் பயன்படுத்தும் பிரிஞ்சி இலை, ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்டதுடன், உடல் எடையை குறைப்பது முதல், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது வரை பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

1 /8

பிரியாணி இலை என்றும் அழைக்கப்படும் பிரிஞ்சி இலையில், ஏராளமான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்களுடன், இரும்புச் சத்து, தாமிரச்சத்து, கால்சியம், பொட்டாசியம், செலினியம் என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.  

2 /8

உடல் பருமன்: வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்ட பிரிஞ்சி இலை, அதிக கலோரிகளை எரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.  

3 /8

இதய ஆரோக்கியம்: மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும், கெட்ட கொலஸ்ட்ராலை எரித்து, இதய நோய் அபாயத்தை பெருமளவு குறைக்கிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

4 /8

செரிமான ஆரோக்கியம்: அசிடிட்டி, அஜீரணம், வாயு தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் ஆற்றல் பிரிஞ்சி இலைக்கு உண்டு.

5 /8

நீரழிவு: இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட பிரியாணி இலை, இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது மிகவும் உதவும். எனவே நீரழிவு நோயாளிகள் இதனை தவறாமல் உட்கொள்வது பலன் தரும்.

6 /8

மன அழுத்தம்: அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள பிரிஞ்சி இலை,, மன அழுத்தத்தை போக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம்.

7 /8

நோய் எதிர்ப்பு சக்தி: ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பிரிஞ்சியிலே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, காய்ச்சல், சளி இருமல், போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.