காபி vs டீ: எதில் நெய் கலந்து குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்?

Ghee Coffee vs Ghee Tea: பாலில் டீ, காபி கலந்து குடிப்பதால் வரும் நன்மைகள் மற்றும் இந்த இரண்டில் எதை குடித்தால் உடல் எடை வேகமாக குறையும் என்பதையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 8, 2025, 08:55 PM IST
  • பால் சேர்த்த டீ, காபியில் நெய் கலக்கக் கூடாது.
  • வெந்நீரில் டீ, காபி போடும்போது நெய் கலக்கலாம்.
  • இவை இரண்டுமே ஆரோக்கியமானதாகும்.
காபி vs டீ: எதில் நெய் கலந்து குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்? title=

Ghee Coffee vs Ghee Tea: பாலில் இருந்து எடுக்கப்படும் வெண்ணையை நன்கு சூட்டில் உருக்கி நெய்யை எடுப்பார்கள். நெய் என்பது உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்கக்கூடிய ஒன்றாகும். இதனை நீங்கள் அன்றாடம் பயன்படுத்தினாலும் உடலுக்கு நன்மை அளிக்கும். பொதுவாக நம் வீட்டில் இனிப்புகளிலும், சில நேரம் காரமான சாம்பார் போன்ற உணவுகளிலும் நெய் கலந்து உண்பார்கள்.

ஆனால் பெரும்பாலும் நெய்யை யாரும் காபி, டீ போன்ற நீராகாரத்தில் சேர்த்து அருந்த மாட்டார்கள். இருப்பினும் டீ, காபியில் நெய் கலந்து உண்பது உடல்நலத்திற்கு நன்மையை தரும் என கூறுகின்றனர். குறிப்பாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பழக்கத்தை மேற்கொள்ளலாம்.

டீ, காபியில் நெய் கலந்து குடித்தால்...

நெய் கலந்த காபி என்பதை உடலை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில் பிரபலமான பானமாக இருக்கிறது. உடல் எடை குறைப்புக்கு இது நல்ல பலனை அளிக்கும் எனவும் கூறுகிறார்கள். மறுபுறம், தேநீரிலும் நெய் கலந்து குடிக்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதுவும் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த இரண்டு பானங்களில் எதை குடித்தால் உடல் எடை வேகமாக குறையும் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். அந்த வகையில், இரண்டு பானங்களின் நன்மைகளையும் ஒப்பீடு செய்து எதனை எடுத்துக் கொள்வதன் மூலம் வேகமாக உடல் குறையும் என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | முன் வழுக்கையால் வருத்தமா..இதை மட்டும் பண்ணுங்க உங்கள் முடி பிச்சிக்கிட்டு வளரும்!

நெய் கலந்த காபியின் நன்மைகள்

நெய் கலந்த காபியை புல்லட் புரூப் காபி என்கிறார்கள். இந்த காபியை நீங்கள் பாலில் சேர்த்து குடிக்கக் கூடாது. வெந்நீரில் காபியை சேர்த்து, இரண்டு ஸ்பூன் நெய் கலந்து குடிக்கலாம். தேவைப்பட்டால் இனிப்புக்கு தேனை பயன்படுத்திக் கொள்ளலாம். நெய் கலந்த இந்த காபியில் காஃப்பின் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்திருக்கும். இவை உங்களுக்கு நாள் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்கும். மேலும் கவனத்தை குவிக்க உதவும். மனநிலையையும் சீராக்கும்.

MCTs என்ற மூலக்கூறு வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டும் பசியை கட்டுப்படுத்தும். மேலும் கொழுப்புகளை குறைக்கும். இதன்மூலம், உடல் எடை குறைப்பு வேகமாக நடைபெறும். இதில் உள்ள conjugated linoleic acid, butyric acid ஆகியவை குடல் ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் நன்மை அளிக்கும். மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மட்டுமின்றி அன்டிஆக்சிடென்ட்களும் நிறைந்து இருப்பதால் மூளையையும் கூர்மையாக்கும். மனநிலை சீராக இருக்கும்.

நெய் கலந்த டீயின் நன்மைகள்

தேநீரில் நெய் கலந்து குடிப்பதும் உடல் எடை குறைக்க உதவும். அதே நேரத்தில் இதை பாலில் கலந்து குடிக்க வேண்டாம். கிரீன் டீ அல்லது பிளாக் டீயில் சேர்த்து குடிக்கலாம். குறிப்பாக இவை வயிறு சார்ந்த பிரச்சனைகளை சீராக்கும். செரிமானத்தை சீராக வைத்து உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும், ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கும் இது உதவக் கூடும்.

மேலும் இதில் conjugated linoleic acid இதில் இருப்பதால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் குறைந்து நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். தொற்றுகளில் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம். மனநிலையையும் உடல் நிலையும். மேலும் முட்டி வலி, உடல் வலி போன்றவற்றில் இருந்து இது நிவாரணம் அளிக்கும்.

நெய் கலந்த காபி vs நெய் கலந்த டீ

இரண்டும் செரிமானத்திற்கு உதவும் என்றாலும் உடனடி குறைப்பில் நெய் கலந்த காப்பியே அதிக பயனளிக்கும். நெய் கலந்த காபி வயிறு நிறைவை ஏற்படுத்தும். மேலும், தேவையற்ற பசியை வரவழைக்காது. செரிமான பிரச்னையையும் சீராக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் நெய் கலந்த காபியையும், செரிமான கோளாறுகள் இருப்பவர்கள் நெய் கலந்த தேநீரையும் அருந்துவது கூடுதல் நன்மையை அளிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறலாம். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)

மேலும் படிக்க | எச்சரிக்கை... மாரடைப்பிற்கு பலியான 8 வயது சிறுமி... காரணங்களும் தீர்வுகளும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News