ஏர்டெல் vs ஜியோ: டேட்டா கிடையாது... வாய்ஸ்-ஒன்லி பிளானில் எது பெஸ்ட்?

Voice Only Prepaid Plans: ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் டேட்டா இல்லாத வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 25, 2025, 01:04 PM IST
  • டிராய் சமீபத்தில் உத்தரவு ஒன்றை விதித்துள்ளது.
  • இதன்கீழ் நிறுவனங்கள் வாய்ஸ்-ஒன்லி திட்டங்களை கொண்டு வந்துள்ளன.
  • இதனால், 2ஜி வாடிக்கையாளர்கள் பயன்பெறுவார்கள்.
ஏர்டெல் vs ஜியோ: டேட்டா கிடையாது... வாய்ஸ்-ஒன்லி பிளானில் எது பெஸ்ட்?  title=

Airtel Jio Voice Only Prepaid Plans: ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் மட்டும்தான் மொபைல் தொலைத்தொடர்பு துறையில் நீடித்து சேவையாற்றி வருகின்றன. இவற்றில் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தவிர்த்து மற்ற மூன்று நிறுவனங்களும் தனியார் வசம் இருப்பவை. 

இந்த நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் + மெசேஜ் + ஓடிடி ஆகிய சேவைகள் அடங்கிய பிரீபெய்ட் திட்டங்களையே வழங்கி வருகின்றன. ஒரு சில திட்டங்களில் ஓடிடி சேவை இருக்காது. ஆனால், அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலும் டேட்டா என்பதுதான் பிரதானமாக இருக்கும். டேட்டாவை பொறுத்துதான் பிரீபெய்ட் திட்டங்களின் விலையும் நிர்ணயிக்கப்படுகின்றன. 

TRAI விதிமுறைகள்

இதனால், நீங்கள் ஸ்மார்ட்போனில் இரண்டு சிம்களை வைத்திருப்பவர் என்றால் இரண்டு சிம்களிலும் டேட்டா பிளான்களை போட்டு அதனை பயன்படுத்துவது என்பது இயலாத காரியம். அதுவும் 5ஜி சேவை வரம்பற்ற வகையில் கிடைக்கும்போது, இரண்டாவது சிம்மில் டேட்டா என்பது தேவையற்றதாகிவிடுகிறது. ஸ்மார்ட்போன் இல்லாதவர்களும் கூட இந்த காரணத்தினால், அதிக கட்டணம் செலுத்தி டேட்டா அடங்கிய பிளான்களையே ரீசார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால் சில மாதங்களிலேயே சிம் செயலாற்றதாகிவிடுகிறது.

மேலும் படிக்க | Reliance Jio... டேட்டா ஒன்லி பேக்குகள்... 50 GB டேட்டாவுடன் OTT பலன்கள்.. பயனர்கள் ஹேப்பி
zeenews.india.com/tamil/technology/reliance-jio-recharge-plan-which-gives-2-gb-data-per-day-with-free-netflix-know-the-cost-validity-and-other-details-554392

2ஜி வாடிக்கையாளர்களுக்கு...

அந்த வகையில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் அதன் 2ஜி பயனாளர்களுக்கு வெறும் வாய்ஸ்-ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. தற்போது, ஏர்டெல் நிறுவனம் தனது வாய்ஸ்-ஒன்லி திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு மிகவும் மலிவு விலையில் வழங்கும் வகையில் அறிவித்துள்ளது. அதாவது, வாய்ஸ்-ஒன்லி திட்டங்களின் விலையை குறைத்துள்ளது. ஜியோவின் வாய்ஸ்-ஒன்லி திட்டங்கள் குறைத்தும் இங்கு பார்க்கலாம். 

ஏர்டெல் வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்கள்

முன்னர் 499 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்த 84 நாள்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டம் தற்போது 469 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 30 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எந்த நெட்வொர்க் உடனும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை பேசிக்கொள்ளலாம். நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் கிடையாது. 900 எஸ்எம்எஸ்கள் இலவசமாக கிடைக்கும். 

அதேபோல், 365 நாள்கள் வழங்கப்பட்டு வந்த 1,959 ரூபாய் திட்டம் தற்போது 110 ரூபாய் குறைக்கப்பட்டு, ரூ.1,849 ஆக உள்ளது. நாடு முழுவதும் எந்த நெட்வொர்க் உடனும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை பேசிக்கொள்ளலாம். நாடு முழுவதும் ரோமிங் கட்டணம் கிடையாது. 3,600 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

ஜியோ வாய்ஸ்-ஒன்லி ரீசார்ஜ் திட்டங்கள்

ஜியோவில் இதே 84 வேலிடிட்டி கொண்ட வாய்ஸ்-ஒன்லி திட்டம் 458 ரூபாய் ஆகும். இதில் 1000 எஸ்எம்எஸ்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் வரம்பற்ற காலிங் வசதி கிடைக்கிறது. அதாவது, ஏர்டெல் பிளானை விட 11 ரூபாய் குறைவானது ஆகும். அதே நேரத்தில், 365 வேலிடிட்டி திட்டம் ஜியோவில் 1,958 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் 3600 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். இந்த இரண்டிலும் டேட்டா கிடைக்கிறது. அதாவது ஜியோவில் ஏர்டெலை விட 109 ரூபாய் அதிகமாகும். 

மேலும் படிக்க | Samsung Galaxy S25 வாங்கும் எண்னம் உள்ளதா? இந்த 4 அம்சங்களை பற்றி முதலில் தெரிந்துகொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News