குடியரசு தினம் கொண்டாட முக்கிய காரணம் ‘இவர்’ ஒருவர்தான்! யார் தெரியுமா?

Main Reason To 76th Republic Day 2025 : ஜனவரி 26ஆம் தேதி (நாளை) இந்திய குடியரசு தினத்தை கொண்டாட இருக்கிறோம். இந்த தினத்தை, நாம் இப்போது மகிழ்ச்சியாக கொண்டாட சில தலைவர்கள் காரணமாக இருந்துள்ளனர். அவர்களுள் முக்கியமானவர் ஒருவர் இருக்கிறார். அவர் குறித்து இங்கு பார்ப்போம்.

Main Reason To 76th Republic Day 2025 : இந்திய குடியரசு தினத்தை நாளை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் விதவிதமான கொண்டாட்டங்களுக்கும் அணிவகுப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக டெல்லியில் ஏற்பாடுகள் தடபுடலாக உள்ளன. இந்த சமயத்தில், குடியரசு தினத்தை கொண்டாட காரணமானவர்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இதைப்பற்றி இங்கு முழுமையாக பார்க்கலாம்.

1 /7

குடியரசு தினம் என்றால் என்ன? 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த தினத்தில்தான் இந்தியா குடியரசு பெற்ற நாடாகவும் அறிவிக்கப்பட்டது. இதனைதான் நாம் வருடா வருடம் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். 

2 /7

குடியரசு தினத்தில் மிக முக்கிய அங்கம் வகிப்பது, குடியரசு தின அணிவகுப்புகள்தான். இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநிலங்களையும் பரைசாற்றி, இந்தியாவின் பாரம்பரிய, கலாச்சாரம் ஆகியவற்றை காட்டும் வகையில் அணிவகுப்புகள் நடைபெறும். 

3 /7

இந்தியாவின் சகோதரத்துவம், ராணுவ படை பலம் ஆகியவற்றை பரைசாற்றும் வகையிலும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் அணிவகுப்புகளும் நடைபெறும். 

4 /7

‘இந்திய அரசியலமைப்பின் தந்தை’ என அழைக்கப்படும் அம்பேத்கர், இன்று நாம் குடியரசு தினத்தை சுதந்திரமாக கொண்டாட காரணமாக இருப்பவர் என்பது பலரது கருத்தாகும். அது எப்படி தெரியுமா?

5 /7

சம உரிமை, சாதி ஒழிப்பு, ஒதுக்கீடு முறை, பெண்ணுரிமை பாதுகாப்பு என பலவித பரிமாணங்களை மனதில் வைத்து, அம்பேத்கர் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கினார். இதுவே, காலத்தால் முந்திய ஆவணமாக மாறி இன்றும் பலருக்கு பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது.

6 /7

அம்பேத்கர், இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழுவின் தலைவராக இருந்தார். இதனால், இந்திய அரசியலமைப்பை உருவாக்குவதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு. சமத்துவம் மற்றும் சமூக நீதியை கருத்தில் கொண்டு, இந்தியாவின் அனைத்து பண்பாட்டு பரிமாணங்களையும் மனதில் வைத்து அவர் அரசியலமைப்பை வடிவமைத்தார். 

7 /7

அம்பேத்கருடன் சேர்த்து, குடியரசு இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக பதவி வகித்த ராஜேந்திர பிரசாத் மற்றும் குடியரசு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஆகியோரும் இந்த குடியரசு தினத்தை நாம் இப்போது கொண்டாட காரணமாக இருப்பவர்கள்தான்.