Union Budget 2025: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட் குறித்து பலருக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. பல துறைகள் மற்றும் பிரிவுகளை சார்ந்த பிரதிநிதிகள் தங்கள் கோரிக்கைகளை நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளனர்.
Budget 2025 Expectations: பட்ஜெட் 2025 எதிர்பார்ப்புகள்
பட்ஜெட் குறித்து அதிக நம்பிக்கையும் எதிர்பார்ப்புகளும் கொண்டுள்ள துறைகளில் காப்பீட்டுத் துறையும் ஒன்றாகும். பட்ஜெட்டில் காப்பீடு மற்றும் சுகாதார சேவைகள் துறைகளுக்கு பல வரிச் சலுகைகள் வழங்கப்படும் என்று காப்பீட்டு நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன. 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்வார். காப்பீட்டுத் துறையில் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்று, 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் வரி விதிகளை மாற்றுவதாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இதற்கான கோரிக்கைகள் காப்பீட்டுத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
Insurance Sector: காப்பீட்டுத் துறைக்கு நிதி உதவிக்கான தேவை
2047 ஆம் ஆண்டுக்குள் 'அனைவருக்கும் காப்பீடு' என்ற இலக்கை அடைய 'பீமா சுகம்' போன்ற முயற்சிகளுக்கு ஒழுங்குமுறை மற்றும் நிதி ஆதரவு தேவை என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். காப்பீட்டு துறையில் ஏற்படும் சாதகமான மாற்றங்கள், இதில் மக்களின் ஆர்வத்தை அதிகரிப்பதோடு, பாதுகாப்பான்ன சூழலையும் உருவாக்கும்.
Section 80C, Section 80D: 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் வரி விதிகளில் மாற்றம்
காப்பீட்டுத் துறையில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவுகள் 80சி மற்றும் 80டி இன் கீழ் வரி விதிகளில் மாற்றங்கள் வர வேண்டும் என காப்பீட்டுத் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள். காப்பீட்டுத் துறையில் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாக, 80C மற்றும் 80D பிரிவுகளின் கீழ் வரி விதிகளை மாற்ற வேண்டியது மிக அவசியம். தற்போது, 80C இன் கீழ் பணம் செலுத்துவதற்கான வரம்பு ரூ.1,50,000 ஆக உள்ளது. இது கடந்த சில ஆண்டுகளாக மாறாமல் உள்ளது. இதில் PPF மற்றும் கடன்கள் போன்ற பிற அத்தியாவசிய விஷயங்களும் அடங்கும். இதனால் மக்கள் தங்கள் முக்கியமான நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க வாய்ப்பு குறைகிறது.
ஓய்வூதியத் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி காப்பீட்டுத் துறைக்கு நிதி வலிமையை மேம்படுத்த பல வாய்ப்புகளை வழங்குகிறது. ஆயுள் காப்பீட்டு வருடாந்திர திட்டங்களின் வரி விலக்கை தேசிய ஓய்வூதியத் திட்டத்துடன் (NPS) ஒருங்கிணைப்பதன் மூலமும், வருடாந்திர திட்டங்களின் முதன்மை கூறு மீதான வரி சிக்கலைத் தீர்ப்பதன் மூலமும், ஓய்வூதியத் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய முடியும் என்று பொருளாதார நிபுணர்கள் நம்புகிறார்கள்.
நாட்டில் காப்பீட்டு அணுகல் மிகவும் குறைவாக உள்ளது
IRDAI-யின் ஆண்டு அறிக்கையின்படி, நாட்டின் காப்பீட்டு அணுகல் 2022-23 ஆம் ஆண்டில் 4 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 3.7 சதவீதமாக இருந்தது. 2022-23 ஆம் ஆண்டில் 3 சதவீதமாக இருந்த ஆயுள் காப்பீட்டுத் துறையின் அணுகல் 2023-24 ஆம் ஆண்டில் 2.8 சதவீதமாகக் குறைந்தது. ஆயுள் கவர் அல்லாத காப்பீட்டுத் துறையைப் பொறுத்தவரை, 2023-24 ஆம் ஆண்டில் இந்த வரம்பு 1 சதவீதமாகவே இருந்தது.
Pension: ஓய்வூதியம் மற்றும் வருடாந்திரத் திட்டங்களுக்கு ஆதரவு
மத்திய பட்ஜெட் அரசாங்கத்திற்கு தொழில்துறையின் சவால்களை நிவர்த்தி செய்யவும், காப்பீட்டுத் திட்டங்களை பரவலாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்கவும் மிகவும் தேவையான வாய்ப்பை வழங்க வேண்டும் என காப்பீட்டு நிபுணர்கள் கருதுகிறார்கள். 2025 பட்ஜெட்டில் மத்திய அரசு ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர திட்டங்களுக்கான ஆதரவை அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ