அனுராக் கேஷ்யப் மற்றும் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பில், அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், 'TeeJay' அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் நடிப்பில், வெற்றிமாறனின் உதவி இயக்குனரான வர்ஷா பரத்தின் இயக்கத்தில் உருவான Bad Girl படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று (26.1.2025) சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது.
டீசர் வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர்களான வெற்றிமாறன் மற்றும் அனுராக் கேஷ்யப், நடிகர்களான அஞ்சலி சிவராமன் சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், படத்தின் எடிட்டரான ராதா ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி S தானு, இயக்குனர் மிஷ்கின், நடிகை டாப்ஸி பண்ணு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பெண்ணின் வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த Bad Girl படத்தின் டீசரை பார்த்தபின் விருந்தினர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளராக வெற்றிமாறன் இந்த படத்தைப் பற்றி பேசும் பொழுது,
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியில் வரும் கதைகளில், எந்தக் கதை வித்தியாசமாக தெரிந்தாலும், அனுராக் கேஷ்யப்பிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி இந்த கதையை பகிர்ந்து கொள்ளும் போதே நாங்கள் இருவரும் சேர்ந்து பண்ணும் ஐடியா இருந்தது. வேறு சில காரணங்களுக்காக தள்ளிப் போனது. ஆனால் விடுதலை 2 பட சூட்டிங்கின் போது, இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்த அனுராக், படத்தை மிகவும் பாராட்டி நானே இந்தப் படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினார். ஆக அனுராக் கேஷ்யப் தயாரிக்கும் முதல் தமிழ் படம் இதுதான். மேலும் அனுராக் கேஷ்யப் இந்தப் படத்தின் இசைக்காக அமித் திருவேதியை நானே தொடர்பு கொண்டு பேசுகிறேன் என்று கூறி, அமித் திரிவேதியை இந்த படத்தின் இசைக்கு கொண்டு வந்தார். ஆக அமித் திரிவேதிக்கும் இதுதான் முதல் படம். மேலும் ரோட்டர் டாம் திரைப்பட விழாவில் தமிழ் படங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதில் முக்கிய பிரிவான Tiger Competetion பிரிவில், முதல் பெண் இயக்குனரான வர்ஷா பரத்தின் Bad Girl படமும் இடம்பெற்று இருப்பது, தனிச்சிறப்பு . இப்படி பல 'முதல்' விஷயங்கள் இருப்பதால் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இந்த நிகழ்வை பெரிதாக நடத்துகிறது என்று கூறினார்.
இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தைப் பற்றி பேசும் பொழுது,
இந்தப் படத்தின் டிரைலர் பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது. வர்ஷா பரத் எப்படிப்பட்ட ஆளுமை என்று பார்க்கும் பொழுது, " வெற்றிமாறன் போன்ற மிகப்பெரிய ஆளுமையிடம் ஏதோ இரண்டு வருடம் அசிஸ்டெண்டாக வேலை பார்த்து ஒரு படம் பண்ணினோம் என்று இல்லாமல், முழுக்க முழுக்க சினிமாவை உயிராக நேசித்து, அதை ஒவ்வொரு இடத்திலும் கற்றுத் தெரிந்து,தன் குருவுக்கு மரியாதை செலுத்தும் ஆளுமையாகத்தான் இந்தப் படத்தின் டிரைலரை பார்க்கும் பொழுது வர்ஷா பரத் தெரிகிறார்". பொதுவாக close up shots எடுப்பது மிகவும் கடினம், ஆனால் இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது, close up shots நிறைய உள்ளது. ஹீரோயின் அஞ்சலி சிவராமனின் கண் அழகாக உள்ளது. இந்த மாதிரியான படங்கள் தான் சினிமாவிற்கு வர வேண்டும். ஏனெனில் Bad Girl என்ற பெண் சார்ந்த உளவியல் படத்தை, ஒரு ஆண இயக்குனரால் எடுக்க முடியாது பெண்ணிய இயக்குனரால் மட்டுமே எடுக்க முடியும். மேலும் இந்த மாதிரியான கதையை எடுப்பதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என்று கூறினார்.
நடிகை டாப்ஸி பண்ணு படத்தைப் பற்றி கூறும்பொழுது,
15 வருடத்தில் வெற்றிமாறன் சார் இந்தப் படத்திற்கு தான் என்னை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளார். நான் எப்பொழுதுமே நினைப்பதுண்டு, ஏன் எப்பொழுதுமே ஆண்களைப் பற்றிய படங்களே வருகிறது? ஏன் பெண்களைப் பற்றிய படம் பெரிதாக வரவில்லை? என்று யோசிப்பேன், ஆனால் இந்த படம் பெண்களைப் பற்றி பேசும் படமாக மட்டும் இல்லாமல், படத்தின் இயக்குனரே பெண்ணாக இருப்பது தனி சிறப்பு. இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று கூறினார்.
மேலும் படிக்க | “சாதிய படங்கள் தேவையற்றது” கெளதம் மேனன் பேச்சால் எழுந்த சர்ச்சை!
மேலும் படிக்க | MGR ஸ்டைலில் விஜய்! ஜன நாயகன் படத்தின் 2வது லுக்கில்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ