Dangerous Snakes Will Eat Humans : அனகாேண்டா படத்தை பார்த்துவிட்டு, பயத்தில் அரண்டு போய் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டு பலர் இருந்திருப்பர். அந்த படங்களில், ஒரு ஆளை அப்படியே கடிக்காமல் அந்த பாம்புகள் விழுங்கும். இதை பலர், கதை என்று மட்டும்தான் நினைத்து கொண்டிப்போம். ஆனால், உண்மையிலேயே சில பாம்புகள் மனிதர்களை அப்படியே விழுங்கி விடுமாம். அந்த பாம்புகளின் வகைகள் குறித்தும், குணாதிசயங்கள் குறித்தும் இங்கு பார்க்கலாம்.
பாம்புகள் மனிதர்களை தாக்க காரணம்..
பாம்புகள் பெரும்பாலும் மனிதர்களை இரையாக பார்ப்பதை விட, அச்சுறுத்தலாகதான் பநர்க்கும். இன்னும் சொல்லப்போனால் அனகோண்டா அல்லது ராஜ நாகங்கள் கூட பறவைகள், முயல்கள் உள்ளிட்ட சில சிறிய விலங்குகளை மட்டுமே சாப்பிடும். ஆனாலும், ஒரு பாம்பு காரணமே இன்றி ஒரு மனிதனை தாக்குகிறது என்றால், அந்த மனிதனை பாம்பு தன் இரை என்று தவறாக நினைத்து விட்டது என அர்த்தம். அப்படி, மனிதர்களை கூட விழுங்கிவிடும் சில பாம்புகள் குறித்து இங்கு பார்ப்போம்.
1.வலைப்பின்னல் மலைப்பாம்பு:
இதனை ஆங்கிலத்தில் Malayopython Reticulatus என குறிப்பிடுகின்ரனர். இது, உலகின் மிக நீளமான பாம்பாகும். 30 அடி வரை வளரும் தன்மை கொண்ட இந்த பாம்பு, தென்கிழக்கு ஆசிய காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களில் இருக்குமாம். புல்வெளிகள் இதன் சாம்ராஜ்ஜியமாக இருக்குமாம். அது மட்டுமல்ல, இவை பெரும்பாலும் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு அருகேயே வாழுமாம்.
உண்மை சம்பவங்கள்:
இந்த பாம்பு, 2017ஆம் ஆண்டு, ஒரு பெண்ணை அப்படியே விழுங்கி விட்டதாம். இந்த சம்பவம் இந்தோனேசியாவில் நடந்துள்ளது. அதே போல, பல மலைவாழ் மக்கள் இந்த பாம்பால் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2.ஆஃப்ரிக்கன் பைதான்:
இந்த பாம்பை பெரும்பாலும் ஆஃப்ரிக்காவில்தான் பார்க முடியுமாம். இவை, 20 அடி வரை வளர கூடியவையாகவும் இருக்குமாம். இவையும் பெரும்பாலும் கிராம பகுதிகளில் வளருபவையாக இருக்குமாம்.
உண்மை சம்பவங்கள்:
2002ஆம் ஆண்டு, ஒரு 10 வயது சிறுவனை இந்த பாம்பு அப்படியே விழுங்கியிருக்கிறது. இந்த சம்பவம் தர்பான் என்கிற இடத்தில் நடந்துள்ளது. இதுதான், மனிதர்களை பாம்புகள் சாப்பிடும் என்பதற்கான முதல் சான்றாக கருதப்படுக்கிறது.
இதே போல கனடாவிலும் 2 சிறுவர்களை இந்த பாம்பு கடித்துவிட்டு தப்பியோடி இருக்கிறது.
3.பச்சை அனகோண்டா:
இந்த உலகில் இருப்பதிலேயே மிகவும் தடிமனான பாம்பு இனங்களுள் ஒன்று, இந்த பச்சை அனக்கோண்டா. இவை 20 அடி நீளம் கொண்டவையாகவும் 200, 90 கிலோ எடை கொண்டவையாகவும் இருக்குமாம். இந்த வகை பாம்புகள் பெரும்பாலும் தெற்கு ஆப்ரிக்க காடுகளில்தான் வாழுமாம்.
உண்மை சம்பவங்கள்:
அமேசான் காடுகளில் 2 பேர் நீந்தி கொண்டிருந்த போது, அவர்களை தண்ணீருக்கு அடியிலேயே, இந்த பாம்பு கடித்து இழுத்து சென்றதாக சான்றுகள் உள்ளன. இது குறித்து எழுதப்பட்ட புத்தகங்களிலும் இவை மனிதர்களை சாப்பிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கனவில் பாம்பு வந்தால் ‘இந்த’ 8 அர்த்தங்களில் ஒன்றாக இருக்கும்! என்னன்னு பாருங்க..
மேலும் படிக்க | இறந்த ஆண் பாம்பை பார்த்து துடிதுடித்த பெண் பாம்பு - வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ