Reason Behind Ajith Kumar Padma Bhushan Award : 2025ஆம் ஆண்டு, யாருக்கு நல்ல ஆண்டாக அமைந்திருக்கிறதோ இல்லையாே, அஜித்திற்கு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 2 வருடங்களாக அவரது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இந்த ஒரே ஆண்டில் அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, சமீபத்தில் துபாயில் நடந்த 24H கார் ரேஸில் கலந்து கொண்ட அவர், 3வது இடத்தை பெற்றார். இப்போது இந்த வெற்றிக்கெல்லாம் வெற்றியாக, அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பத்மபூஷன் விருது பெறும் அஜித்:
இந்தியாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் பத்ம பூஷன் விருது நடிகர் அஜித்திற்கு நேற்று அறிவிக்கப்ப்ட்டது. கலைத்துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை பெறுவதில் தான் பெருமை கொள்வதாக அஜித் அவரது செய்தி தொடர்பாளர் மூலம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார். கூடவே தனக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு தெரிவித்து வரும் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு நன்றி என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் அவர்கள் அறிவித்த மதிப்புமிக்க பத்ம விருதைப் பெறுவதில் நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிக்க கெளரவத்திற்காக, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு மற்றும் மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோருக்கு எனது…
— Suresh Chandra (@SureshChandraa) January 25, 2025
விஜய்தான் காரணமா?
நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக்கழகம்’ கட்சியை தொடங்கி அரசியலுக்குள் வந்தது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், பிற கட்சிகள் மத்தியில் விமர்சனத்தை கிளப்பியது. குறிப்பாக, ஆளும் கட்சியான திமுக, விஜய் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவது, கட்டுப்பாடுகள் விதிப்பது ஆகியவை, சமீப சில நாட்களாக வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இப்போது, அஜித் பத்ம பூஷன் விருது வாங்குவதிலும் இப்படியொரு அரசியல் ஒளிந்திருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் பேசி வருகின்றனர்.
அதாவது, அஜித்தும் விஜய்யும் தனிப்பட்ட வாழ்க்கையில் நண்பர்கள் என்றாலும் திரைத்துறையை பொறுத்த வரை போட்டி நடிகர்களாக பார்க்கப்பட்டு வருகின்றனர். சொல்லப்பாேனால், விஜய்தான் அஜித்திற்கு முன்பிருந்தே திரையுலகில் இருக்கிறார். ஆனால் அவருக்கு பத்மஸ்ரீ விருது எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வர இருக்கும் இந்த நேரத்தில் அவரை பர்சனல் ஆக தாக்க வேண்டும் என்பதற்காக, அஜித்திற்கு விருது வழங்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய அரசுக்கு அவரை பரிந்துரை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
முட்டாள்களின் கணிப்பா?
இப்படி, அஜித் விருது வாங்குவதற்கு விஜய்யின் அரசியல் வருகைதான் காரணம் என சிலர் இணையத்தில் பேசி வருவதை ஒரு சிலர் முட்டாள்தனம் என கூறி வருகின்றனர். அடிப்படையில் உண்மை இல்லாத இது போன்ற கருத்துகளை பரப்பாமல் இருப்பது நல்லது என்றும் சிலர் பேசி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், விருது வாங்கப்போகும் அஜித்தும் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
அஜித்திற்கு வாழ்த்து சொல்லாத விஜய்..
அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு, தமிழகத்தில் என்ன நடந்தாலும் முதல் ஆளாக ட்வீட் செய்து விடுகிறார் விஜய். ஆனால், அப்படிப்பட்டவர் அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்றது குறித்து ஒரு வார்த்தை கூட இணையத்தில் பதிவிட வில்லை. முதல்வர், துணை முதல்வர் என அரசியல் பிரமுகர்கள் முதல் ரஜினி, கமல் என திரை பிரபலங்கள் வரை பலரும் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த போதும் விஜய் வாய் திறக்கவில்லை.
அதே போல, இப்பாேது அஜித் பத்ம பூஷன் விருதுக்கு தேர்வாகியிருக்கும் நேரத்தில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இப்போதும் விஜய் இது குறித்து எதுவுமே பதிவிடவில்லை. இது குறித்தும் மக்கள் இணையதளங்களில் பேசி வருகின்றனர்.
மேலும் படிக்க | அஜித் மட்டுமல்ல..தமிழகத்தில் இருந்து பத்மஸ்ரீ விருது பெறும் 13 பேர்!! முழு லிஸ்ட்..
மேலும் படிக்க | அஜித் குமாருக்கு முன் பத்ம பூஷன் விருது வென்ற தமிழ் நடிகர்கள் யார் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ