நம்மில் பலருக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் அதில் நன்மைகள், தீமைகள் அடங்கியிருக்கின்றன. உருளைக்கிழங்கு சாப்பிடுவதனால் என்னென்ன மாற்றங்கள் உடலில் ஏற்படும் என்பதை பார்க்கலாமா..?
உருளைக்கிழங்கு பிரியரா நீங்கள்..?
உருளைக்கிழங்கு மிகவும் பிரபலமான காய்கறிகளில் ஒன்றாகும். விலை மலிவானவை, ஆனால் இவற்றை வைத்து பல டிஷ்களை செய்யலாம். ஆரோக்கியம் மட்டுமன்றி சுவை, புரதம் என பல சத்துக்கள் இதில் அடங்கியுள்ளது. சிப்ஸ், வேகவைத்தது, வருத்தது என பல்வேறு வகைகளில் உருளைக்கிழங்குகளை சாப்பிடலாம்.
மேலும் படிக்க | முக சுருக்கங்கள் மாயமாய் மறைய... வேப்பிலை மாஸ்க் தயாரிக்கும் முறை!
உருளைக்கிழங்கு உடலுக்கு நல்லதா..?
உருளைக்கிழங்கு ஆரோக்கியமானதா இல்லையா என்பது எப்போதும் விவாதத்திற்கு உரிய ஒரு தலைப்பாகும். ஒருபுறம், இது ஒரு காய்கறி என்ற வகையில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கது என கூறினால் மறுபுறம் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது என்ற வாதம் எழுகிறது. அவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என பலரால் நம்பப்படுகிறது.
மருத்துவர்கள் கூறுவது என்ன.?
உருளைக்கிழங்கில் ஃபைபரின் அளவு, பொட்டாசியம், ஐயர்ன் சத்துக்கள், வைட்டமின் சி, வைட்டமின் பி 6 போன்றா பல சத்துக்கள் அடங்கியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதை பலரும் உடலுக்கு கேடு என நினைப்பது, இது எப்படி அதை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து அமைந்துள்ளது.
உருளைக்கிழங்கை எப்படி சமைக்க வேண்டு?
உருளைக்கிழங்கும் ஒரு காய்கறி வகைதான். எல்லா காய்கறிகளிலும் இருப்பது போலவே இதிலும் புரதச்சத்துக்கள் உள்ளன. இது நம் உடலுக்கு நன்மை பயக்குமா இல்லையா என்பது அதை சமைக்கும் விதத்தை பொருத்து அமையும். உதாரணத்திற்கு ஃப்ரெஞ்சு ஃப்ரைஸ் போன்ற நன்கு வருக்கப்பட்ட உருளைக்கிழங்குகள் வேகவைத்த உருளைக்கிழங்குகள் அளவிற்கு ஹெல்தியானதாக இருக்காது.
நீங்கள் உருளைக்கிழங்குகளை ஆரோக்கியமான வகையில் சாப்பிட விரும்பினால், அவற்றை கண்டிப்பாக எண்ணெயில் வருத்து சாப்பிடக்கூடாது. பொதுவாகவே நன்கு எண்ணெயில் வருத்த உருளைக்கிழங்குகளை சாப்பிடக்கூடாது. குறிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்போர் அவ்வாறான உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இதில் அதிக அளவில் கொழுப்பு கலந்திருக்கும்.
தினமும் உருளைக்கிழங்கு சாப்பிட்டால் என்ன ஆகும்..?
தினமும் ஒரு உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஒரு சில பலன்கள் கிடைக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் எண்ணெயில் வறுக்காத உருளைக்கிழங்குகளை சாப்பிடாத வரை அல்லது அவற்றை கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளுடன் சேர்த்து சாப்பிடாத வரை உடலுக்கு பெரிதும் ஆபத்து இல்லை. இதனால் கொழுப்பு அதிகரிக்கும் அபாயமமும் குறைவு.
உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் உடல் எடை குறையுமா..?
உடல் எடையை குறைக்க டயட் இருப்போர் உருளைக்கிழங்கை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால், அதை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஆனால், குறைவான அளவிலான உருளைக்கிழங்கு உணவுகள் கண்டிப்பாக உடல் எடை குறைப்பிற்கு பயன்படும் என்கின்றனர், உடற்பயிற்சி வல்லுநர்கள்.
செரிமானத்திற்கு உதவும்:
உருளைக்கிழங்கு உணவு செரிமானத்திற்கு உதவும் என பலரால் நம்பப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உருளைக்கிழங்கில் உள்ள ‘ஸ்டார்ச்’ எனப்படும் பொருள், உணவு செரிமானத்திற்கு உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், வயிற்றில் வளரும் புற்றுநோயான கொலோரெக்டல் கேன்ஸரையும் உருளைக்கிழங்கு தவிர்க்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அளவை உடனடியாக கட்டுப்படுத்த.. இந்த 5 உணவுகள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ