கெட்ட கொழுப்பை சுலபமாய் குறைக்க இந்த பழங்களை தோலுடன் சாப்பிடலாம்

Cholesterol Control Tips: சில எளிய, இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். இவற்றில் பழங்களுக்கும் ஒரு முக்கிய பங்குள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 29, 2025, 06:39 PM IST
  • அதிக கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிடுவது நல்லது.
  • பேரிக்காயை தோல் நீக்காமலேயே சாப்பிடலாம்.
  • இதன் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கெட்ட கொழுப்பை சுலபமாய் குறைக்க இந்த பழங்களை தோலுடன் சாப்பிடலாம் title=

Cholesterol Control Tips: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக மக்கள் பல வித உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். சில சமயங்களில் உணவுக் கோளாறுகள் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை மக்களுக்கு ஆபத்தாகலாம். இவற்றின் காரணமாக கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும். 

உடலில் கொழுப்பின் அளவு அதிகரித்தால் இதய ஆரோக்கியம் மோசமடைய வாய்ப்புள்ளது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆகையால் கொலஸ்ட்ரால் அளவை எப்போதும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியமாகும். சிலர் இதற்கு சில மருந்துகளை உட்கொள்கிறார்கள். மருந்துகள் தவிர, கொழுப்பின் அளவை (கெட்ட கொழுப்பு) கட்டுப்படுத்த பல வீட்டு வைத்தியங்களையும் பயன்படுத்தலாம்.

சில எளிய, இயற்கையான வழிகளில் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தலாம். இவற்றில் பழங்களுக்கும் ஒரு முக்கிய பங்குள்ளது. தோலுடன் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பைக் குறைக்கும் 4 பழங்கள் உள்ளன. கெட்ட கொழுப்பைக் குறைக்க தோலுடன் உட்கொள்ள வேண்டிய பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

சப்போட்டா (Chiku)

சப்போட்டாவின் தோலும் சப்போட்டா பழத்தை போலவே மிக ஆரோக்கியமானது. சப்போட்டா தோலில் இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளன. இதில் வேறு பல ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன. அதை தோலுடன் சாப்பிட்டால், அதிக கொழுப்பு பிரச்சனைக்கு பெரிய நிவாரணம் கிடைக்கும். கொழுப்பின் அளவு குறையும்.

ஆப்பிள் (Apple)

ஆப்பிளை அதன் தோலுடன் சாப்பிடுவது நல்லது. எனினும், பலர் ஆப்பிளை தோலை உரித்து உட்கொள்கிறார்கள். ஆப்பிளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன. இதை தோலுடன் சேர்த்து சாப்பிடுவது அதிக நன்மை பயக்கும். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் ஆப்பிளை தோல் நீக்காமல் சாப்பிட வேண்டும். 

கிவி (Kiwi)

மக்கள் பெரும்பாலும் கிவி பழத்தை தோல் உரித்த சாப்பிட்டு, அதன் தோலை தூக்கி எறிந்து விடுகிறார்கள். ஆனால் கிவி பழத் தோலில் பல பண்புகள் உள்ளன என்பது பலருக்குத் தெரிவதில்லை. தோல் உரிக்காமல் இதை சாப்பிடுவது நன்மை பயக்கும். இதன் தோலில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் உள்ளன. அவை கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் பெரிய அளவில் உதவும். 

பேரிக்காய் (Pears)

அதிக கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள் பேரிக்காய் சாப்பிடுவது நல்லது. பேரிக்காயை தோல் நீக்காமலேயே சாப்பிடலாம். இதன் தோலில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

இந்தப் பழங்களை அவற்றின் தோலுடன் சாப்பிடுவது பல வித நன்மைகளை அளிக்கும். எனினும், இவற்றை சாப்பிடுவதற்கு முன்பு இவற்றை நன்கு கழுவி, சுத்தம் செய்து பின்னரே உட்கொள்ள வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காலையில் எழுந்ததும் இந்த தண்ணீரை மட்டும் குடியுங்கள்! உடலில் எந்த பிரச்சனையும் வராது!

மேலும் படிக்க | எச்சரிக்கை... கொழுப்பு கல்லீரல் இருப்பதை உணர்த்தும் சில ஆரம்ப அறிகுறிகள் இவை தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News