சென்னை: கிளாஸ்கோவில் நடைபெறும் COP26 – பருவநிலை மாநாட்டில் உலகத்தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றி, தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர் வினிஷா உமாசங்கர். சூரியசக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கியவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 வயது சிறுமி வினிஷா உமாசங்கர்
திருவண்ணாமலையில் எஸ்கேபி வனிதா சர்வதேச பள்ளியில் படித்து வரும் வினிஷா, உமாசங்கர் எஸ் - சங்கீதா. யு தம்பதியின் மகள் ஆவார்.
சுற்றுச்சூழல் ஆஸ்கார்" என அழைக்கப்படும் எர்த்ஷாட் பரிசின் இறுதிப்போட்டியாளர்களில் ஒருவரான வினிஷா உமாசங்கரை, காலநிலை மாநாட்டில் மாசற்ற தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்கும் கூட்டத்தில் பேச இளவரசர் வில்லியம் அழைப்பு விடுத்திருந்தார்.
பிரதமர் நரேந்திரமோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க அதிபர் ஜோபைடன் போன்றோர் கலந்துகொண்ட மாநாட்டில், காலநிலை மாநாட்டில் மாசற்ற தொழில்நுட்பம் மற்றும் புதுமைகளைப் பற்றி வினீஷா உரையாற்றினார்.
"நான் இந்தியாவைச் சேர்ந்தவள் என்பதைவிட இந்த பூமியை சேர்ந்தவள் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் ஒரு மாணவர், கண்டுபிடிப்பாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் தொழில் முனைவோர். ஆனால், அதைவிட மிகமுக்கியமாக, நான் ஒரு நம்பிக்கையாளர்." இன்று உங்கள் அனைவரையும் மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன் “பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள்” என்று வினீஷா கேட்டுக் கொண்டார்.
"எர்த் ஷாட் பரிசின் இறுதிப் போட்டியாளர்களின் சார்பாக, உங்களை எங்களுடன் சேர அழைக்கிறேன். எங்களுடன் துணை நிற்க உங்களை அழைக்கிறேன். பழைய சிந்தனைகளையும், பழைய பழக்க வழக்கங்களையும் கைவிடுவீர்கள் என்று நம்புகிறோம். ஆனால் நான் தெளிவாக சொல்கிறேன், நாங்கள் உங்களை எங்களுடன் சேர அழைத்தால், நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்கள் வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்தகாலத்தில் சிக்கிக்கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம். ஆனால் தயவு செய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று வினீஷா உமாசங்கர் கூறினார்.
15 வயதே நிரம்பிய தமிழக மாணவியின் சக்திவாய்ந்த அழைப்பை கேட்டு வியந்த உலகதலைவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அங்கீகாரம் செய்தனர்.
ALSO READ | ஸ்தம்பித்தது சென்னை! நீண்ட நேரம் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR