SBI... மாதம் ரூ.591 முதலீடு போதும்... உங்களை லட்சாதிபதியாக ஆக்கும் சூப்பர் RD திட்டம்

SBI Har Ghar Lakhpati Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), 'ஹர் கர் லக்பதி' என்ற புதிய RD திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2025, 11:17 AM IST
  • SBI ஹர் கர் லக்பதி இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?
  • பெரிய அளவில் நிதியை உருவாக்க விரும்பும் எளிய மக்களுக்கு உதவும் திட்டம்.
  • குழந்தைகள் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம்.
SBI... மாதம் ரூ.591 முதலீடு போதும்... உங்களை லட்சாதிபதியாக ஆக்கும் சூப்பர் RD திட்டம் title=

SBI Har Ghar Lakhpati Scheme: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ‘ஹர் கர் லக்பதி’ என்ற புதிய தொடர் வைப்புத் திட்டத்தை (RD) அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் பணத்தை சேமித்து பெரிய அளவில் நிதியை உருவாக்க விரும்பும் எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் எளிதாக ரூ. 1 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை திரட்டலாம்.

SBI ஹர் கர் லக்பதி இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது?

எஸ்பிஐயின் ஹர் கர் லக்பதி என்னும் அனைவரும் லட்சாதிபதி ஆகலாம் என்ற திட்டத்தில், நீங்கள் 3 முதல் 10 ஆண்டுகள் வரை நெகிழ்வான காலத்திற்கு மாதாந்திர சேமிப்பு கணக்கை தொடங்கலாம். உதாரணமாக, நீங்கள் 3 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ₹2,500 டெபாசிட் செய்தால், முதிர்ச்சியில் ₹1 லட்சம் கிடைக்கும். 10 ஆண்டுகள் முதலீடு செய்தால், மாதத் தவணை ₹591 ஆகக் குறையும். மாதாந்திர தவணைகள் மற்றும் வட்டி விகிதங்கள் திட்டத்தின் தொடக்கத்தில் தீர்மானிக்கப்படுகின்றன.

SBI ஹர் கர் லக்பதி இந்த திட்ட வட்டி விகிதங்கள் மற்றும் வரி விகிதம்

1. பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம் 6.75% வரை.

2. மூத்த குடிமக்களுக்கு 7.25% வரை வட்டி கிடைக்கும்.

3. எஸ்பிஐ ஊழியர்களுக்கு 8% வரை வட்டி சலுகை கிடைக்கும்.

4. வருமான வரி விதிகளின் கீழ் இந்தத் திட்டத்திற்கு TDS பொருந்தும்.

மேலும் படிக்க | MSSC: பெண்களுக்கான சூப்பர் திட்டம்... இன்னும் கொஞ்ச நாள் தான் சான்ஸ்... இன்னைக்கே முதலீடு செஞ்சுடுங்க

குழந்தைகள் பெயரிலும் கணக்கைத் திறக்கலாம்

10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். குழந்தைகளுக்காக, பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம்.

நெகிழ்வு தன்மை மற்றும் அபராதம்

திட்டத்தில் பகுதி தவணைத் தொகையை டெபாசிட் செய்யும் வசதி உள்ளது, ஆனால் தவணை தாமதமானால் அபராதம் உண்டு. ₹100 தவணையில், அபராதம் ₹1.50 முதல் ₹2 வரை இருக்கலாம். தொடர்ந்து 6 தவணைகளை டெபாசிட் செய்யாவிட்டால், கணக்கு மூடப்பட்டு, மீதமுள்ள தொகை சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்.

கணக்கு தொடக்கும் முறை

எஸ்பிஐயின் ஹர் கர் லக்பதி திட்டத்தின் பலன்களைப் பெற, நீங்கள் உங்கள் அருகிலுள்ள SBI கிளைக்குச் சென்று தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். முதிர்வுத் தொகை மற்றும் முதலீட்டு காலத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாதாந்திர தவணை முடிவு செய்யப்படும். எஸ்பிஐயின் ஹர் கர் லக்பதி திட்டம் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, சிறிய தொகை முதலீட்டிலும் பெரிய நிதியை திரட்டுவதற்கான எளிதான வழியாகும்.

மேலும் படிக்க | EPFO Pension: 10 ஆண்டு கால சர்வீஸுக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்.. எளிய கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News