நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளர்கள் மூன்று கட்டங்களாக அறிவிக்க உள்ளதாக தெரிவித்து, முதற்கட்டமாக 19 மாவட்டச் செயலாளர்களை அறிவித்த நிலையில் இரண்டாம் கட்டமாக இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்திருக்கிறார். இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பில் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் மாவட்ட செயலாளராக மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த SR.தங்கப்பாண்டி என்பவரை கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வெளியிட்டார்.
இந்த நிலையில் மாவட்ட செயலாளராக அறிவித்த SR.தங்கபாண்டி நேற்று மாலை மதுரை வந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மற்றும் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக தொண்டர்கள் அவரது வீட்டில் இருந்து செல்லூர் 60 அடி சாலையில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகம் வரை மேளதாளம் முழங்க காரில் ஊர்வலமாக அழைத்துவந்து பட்டாசு வெடித்து மாலை அணிவித்து கையில் வீரவாள் வழங்கி அலுவலகத்தின் முன்பு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் அந்த பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு காவல்துறையினர் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பொது மக்களுக்கு இடையூறு, அனுமதி இன்றி கூட்டம் கூடியது, மாநகர பகுதியில் அனுமதி இன்றி டிரோன் கேமரா பறக்கவிட்டது, சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தது என தமிழக வெற்றிக்கழக தெற்கு மாவட்ட செயலாளர் தங்கபாண்டி உட்பட தவெக நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் செல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட தலைவர் தங்கபாண்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் உற்சாக வரவேற்பு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்த நிர்வாகிகளால் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் உட்பட தாவக மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழக துவக்க விழா கொண்டாட்டம்
தமிழக வெற்றி கழக கட்சி தொடங்கி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவு பெற்றுள்ளது. இதனையொட்டி இரண்டாம் ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. கழக தலைவர் விஜய் உத்தரவின் பேரில் காரைக்கால் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக வெற்றி கழகத்தில் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு காரைக்கால் ஏழை மாரியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடும் தொழுகையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் படிங்க: பட்ஜெட்டில் இருக்கும் பிரச்னைகள் என்னென்ன...? புட்டுபுட்டு வைத்த தவெக தலைவர் விஜய்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ