Kisan Credit Card Full Details | மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2025-ல் கிசான் கிரெடிட் கார்டு வரம்பு உயர்த்தப்படுவதாக அறிவித்தார். 3 லட்சம் ரூபாய் வரை இருந்த கடன் தொகை வரம்பு இப்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இது தவிர வட்டி மானியம் உள்ளிட்ட கூடுதல் சலுகைகளையும் கிசான் கிரெடிட் கார்டு வைத்திருக்கும் விவசாயிகளுக்கு அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இதுவரை கிசான் கிரெடிட் கார்டு பெறாமல் இருந்த விவசாயிகள், எப்படி கிசான் கிரெடிட் கார்டு பெறுவது? கிசான் கிரெடிட் கார்டு பெற விண்ணப்பிப்பது எப்படி? இதற்கான தகுதிகள் என்ன? ஆவணங்கள் என்ன? என தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதனால், கிசான் கிரெடிட் கார்டு குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
கிசான் கிரெடிட் கார்டு (KCC)
கிஸான் கிரெடிட் கார்டு (KCC) என்பது விவசாயிகளின் நிதித் தேவையை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட திட்டம். இந்த திட்டம் 1998-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தனிநபர் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடம் விவசாயிகள் கடன் பெற்று சிக்கல்களை எதிர்கொள்வதை தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டம் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் செயல்முறையை மிகவும் எளிதாக்குகிறது. குறைந்த வட்டி விகிதம், திருப்பிச் செலுத்த போதுமான காலவகாசம், காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் சேமிப்பு கணக்கில் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் போன்ற பல நன்மைகளை இந்த திட்டம் வழங்குகிறது.
கிசான் கிரெடிட் கார்டு வட்டி
கிஸான் கிரெடிட் கார்டு (KCC) வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வெறும் 4% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம், விவசாயிகள் தங்கள் விவசாயத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
கிசான் கிரெடிட் கார்டின் முக்கிய நன்மைகள்:
குறைந்த வட்டி விகிதம்: விவசாயிகளுக்கு 4% வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.
திருப்பி செலுத்தும் காலவகாசம் : கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தலாம்.
காப்பீட்டு பாதுகாப்பு: கிஸான் கிரெடிட் கார்டுடன் காப்பீட்டு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது.
கூடுதல் நன்மைகள்: சேமிப்பு கணக்கில் கவர்ச்சிகரமான வட்டி விகிதம் மற்றும் ஸ்மார்ட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வசதிகள்.
கிசான் கிரெடிட் கார்டுக்கான தகுதிகள்:
விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வயது உச்ச வரம்பு எதுவும் இல்லை. விண்ணப்பதாரர் ஒரு விவசாயி, பகிர்வு விவசாயி, குத்தகைதாரர் அல்லது சுயஉதவிக் குழு அல்லது கூட்டுப் பொறுப்புக் குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும். விவசாயம், கால்நடை பராமரிப்பு, மீன்பிடித்தல் போன்ற தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
கிசான் கிரெடிட் கார்டுக்கு எவ்வளவு கடன் பெறலாம்?
குறைந்தபட்ச கடன்: ரூ. 1,000
அதிகபட்ச கடன்: ரூ. 5 லட்சம் (மத்திய பட்ஜெட் 2025-க்குப் பிறகு)
கடன் காலம்: 5 ஆண்டுகள்
காப்பீடு இல்லாத கடன்: ரூ. 2 லட்சம் வரை (முன்பு ரூ. 1.60 லட்சம்)
கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை:
* நீங்கள் கிஸான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வங்கியின் இணையதளத்துக்கு செல்ல வேண்டும். (எடுத்துக்காட்டாக - www.nabard.org)
* வங்கியின் இணையதளத்தில் இருந்து "கிஸான் கிரெடிட் கார்டு" விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
* "APPLY" என்பதைக் கிளிக் செய்யவும், இது உங்களை விண்ணப்பப் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும்.
* தேவையான விவரங்களை நிரப்பி "SUBMIT" என்பதைக் கிளிக் செய்யவும்.
* உங்களுக்கு ஒரு விண்ணப்ப குறிப்பு எண் வழங்கப்படும். நீங்கள் தகுதி பெற்றால், வங்கி உங்களை 3-4 வேலை நாட்களுக்குள் தொடர்பு கொள்ளும்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பப் படிவம், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் அல்லது பாஸ்போர்ட், நில உரிமை சான்றிதழ், பயிரிடப்படும் பயிர்கள் பற்றிய தகவல். பிணைய ஆவணங்கள் பொறுத்தவரை ரூ. 2 லட்சத்திற்கு மேல் கடன் பெற விரும்பினால் தேவைப்படும்.
கிஸான் கிரெடிட் கார்டின் முக்கியத்துவம்:
இந்த திட்டம் விவசாயிகளுக்கு எளிதாக கடன் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. குறைந்த வட்டி விகிதம் மற்றும் போதுமான காலம் கொடுத்து திருப்பிச் செலுத்தும் வசதிகள் விவசாயிகளின் நிதி பாதுகாப்பை உறுதி செய்கின்றன. காப்பீட்டு பாதுகாப்பு மற்றும் கூடுதல் நன்மைகள் இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக்குகின்றன.
மேலும் படிக்க | பட்ஜெட் 2025 : விவசாயிகளுக்கு குட் நியூஸ்! கிசான் கிரெட் கார்டு வரம்பு உயர்வு
மேலும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ