Budget 2025 Good News For RD FD Account Holders: மத்திய பட்ஜெட் 2025, இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், FD மற்றும் RD கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் கிடைக்குமா? இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Budget 2025 Good News For RD FD Account Holders: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் 8வது முறையாக இன்று, மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில், பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் பல எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். நிலையான வைப்பு கணக்கு (Fixed Deposit) மற்றும் தொடர் வைப்பு கணக்கு (Recurring Deposit) வைத்திருப்பவர்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கப்போகிறது? அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா, என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பட்ஜெட்டில் இன்று என்னென்ன அறிவிப்பு வெளியாகப்போகிறது என்பது குறித்து நாடே எதிர்பார்த்துக்காத்துக்கொண்டுள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 8வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இதில், FD, RD கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலையான வைப்பு கணக்கு (Fixed Deposit) மற்றும் தொடர் வைப்பு கணக்கு (Recurring Deposit)ஆகியவை, ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள், இதில் முதலீடு செய்வது வழக்கம். இந்த 2025 பட்ஜெட் மீது, FD,RD கணக்கு வைத்திருப்பவர்க்ளுக்கு எக்கச்சக்க எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது.
மெட்சூரிட்டி காலத்தை கணக்கில் கொள்ளாமல், கால வைப்பு வருவாய்க்கு 15% நிலையான வரி இருக்க வேண்டும் என்பது, இந்த கணக்கு வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்புகளுள் ஒன்றாக இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு இன்றைய பட்ஜெட்டில் வரும் என எதிபார்க்கப்படுகிறது.
பெரும்பாலும், வயதானவர்கள், வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர்தான் FD,RDல் முதலீடு செய்கின்றனர். இவர்களுக்கு இது ஓய்வு காலத்திற்கு பிறகு நிலையான வருவாயாகவும் இருக்கும். இந்த வரி மாற்றம், குறுகிய கால ஆதாயங்களுக்கு 20% வரியும், நீண்ட கால ஆதாயங்களுக்கு 12.5% வரியும் விதிக்கப்படும் பங்குச் சந்தைகள் போன்ற பிற சொத்து வகுப்புகளுடன் FD வரிவிதிப்பையும் இணைக்கும்.
மத்திய பட்ஜெட்டுக்கு முன்னர், நிபுணர்கள் நிலையான வைப்பு நிதி முதலீட்டாளர்களுக்கு (Mutual funds investors) வரி நிவாரண நடவடிக்கைகளை பரிந்துரைத்தனர். SBI ஆராய்ச்சி செய்து வெளியிட்டிருந்த அறிக்கையில், மூத்த குடிமக்கள் மற்றும் பொது நிலையான வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வரி நிவாரணத்தை வழங்க வேண்டும் என பரிந்துரைத்தது.
FD-ல் முதலீடு செய்து வைத்திருப்பவர்களில் பலர், மியூஷுவல் ஃபண்ட்ஸ் முதலீட்டாளர்களாகவும் உள்ளனர். இவர்களும் இவர்களும் வரிச்சலுகைகளை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
மூத்த குடிமக்களுக்கு, வட்டி வருமானத்திற்கான விலக்கை ₹50,000 லிருந்து ₹1 லட்சமாக அதிகரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த மாற்றம், FD வட்டியை தங்களின் மொத்த வருமானமாக நம்பியுள்ள பல வயதான குடிமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இருக்கும். நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, முக்கிய அறிவிப்புகள், இன்று பட்ஜெட்டில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.