Budget 2024: பிரதமர் மோடி தலைமையில் மூன்றாவது முறையாக என்டிஏ அரசு ஆட்சி அமைத்துள்ளது. மோடி 3.0 -இன் முதல் பட்ஜெட் தாக்கல் இன்று. நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தனது பட்ஜெட் உரையை அளித்து வருகிறார். விவசாயிகள், இளைஞர்கள், சிறுதொழிகள் என பல துறைகளுக்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.
இளைஞர்களுக்கு நிதியமைச்சரின் பரிசு
நிதி அமைச்சர் (Finance Minister) தனது உரையில், அனைத்துத் துறைகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதற்கிடையில் இளைஞர்களுக்கு நிதியமைச்சர் பெரும் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் அரசாங்கம் மூன்று ஊக்கத் திட்டங்களைக் கொண்டு வரும் என்றும், மூன்று கட்டங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
ரூ.15,000 நேரடியாக EPFO கணக்கில் வழங்கப்படும்
நிதியமைச்சர் இளைஞர்களுக்கு மற்றொரு பெரிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில், முதல் வேலையில் சேர்ந்து, மாத சம்பளம் 1 லட்சம் ரூபாயை விட குறைவாக இருக்கும் பணியாளர்கள், இபிஎஃப்ஓ (EPFO) கணக்கை திறக்கும்போது அவர்களது கணக்கில் ரூ.15,000 நேரடியாக வழங்கப்படும் என்று கூறினார். இந்த தொகை மூன்று தவணைகளில் அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கு (EPF Account) பணி ஓய்வு பிறகான மிகப்பெரிய நிதி பாதுகாப்பாக உள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு அதிக இளைஞர்கள் இபிஎஃப் சந்தாதாரர்கள் ஆவதை உறுதி செய்யும் என நம்பப்படுகின்றது.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் கணக்கு வைத்திருக்கும் பணியாளரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இபிஎஃப் தொகை அனைவருக்கும் அவர்களது பணி ஓய்வுக்கு பிறகான முக்கியமான நிதி ஆதாரமாக பார்க்கப்படுகின்றது. இது மட்டுமின்றி பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் ஓய்வுக்குப் பிறகு இலவச ஓய்வூதிய பலனையும் பெறுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும், பணியாளர்களின் இபிஎஃப் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை ஊதியத்திலிருந்து கழிக்கபட்டு டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்கிறது.
மேலும் படிக்க | Budget 2024: மூத்த குடிமக்களுக்கு மீண்டும் ரயில் கட்டணத்தில் 50% சலுகையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ