உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் போன்ற நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்திவிட்டார். ஆரம்பத்தில் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்திருந்த எலான் மஸ்க் பின்னர் அதில் நிறைய போலி கணக்குகள் இருப்பதாகவும், அதனால் அதனை வாங்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கிவிட்டார். இத்தனை கோடிகள் கொடுத்து ட்விட்டரை வாங்கிய பின், எலான் மஸ்க் எடுத்த அதிரடியான நடவடிக்கைகளில் ஒன்றுதான் ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வாலை பணிநீக்கம் செய்தது, இருப்பினும் இதுகுறித்த செய்தியை அதிகாரபூர்வமாக எலான் மஸ்க் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க | டிவிட்டரை வாங்கினா 75% பணியாளர்களை தூக்கிடுவேன்! எலோன் மஸ்க் திட்டம்?
ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் வெறும் கையோடு செல்லமாட்டார் என்றும் அவர் 42 மில்லியன் டாலர் எடுத்து செல்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3,457,145,328 ஆகும். ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, பராக் அகர்வால் தனது முதலீடு செய்யப்படாத ஈக்விட்டி விருதுகளில் 100 சதவீதத்தை வழங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருந்த அகர்வால், கடந்த ஆண்டு நவம்பரில் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர் ஐஐடி பாம்பே மற்றும் ஸ்டான்போர்ட் முன்னாள் மாணவர் ஆவார், இவருக்கு தற்போது வழங்கப்படவுள்ள மதிப்பீட்டில் ஒரு வருடத்திற்கான அடிப்படை சம்பளம் மற்றும் அனைத்து ஈக்விட்டி மதிப்புகளும் அடங்கும் என்று ஊடங்கங்களின் அறிக்கைகள் தெரிவிக்கிறது.
பராக் அகர்வால் ட்விட்டரில் பணிக்கு சேரும்போது அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 1000 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர், இப்போது அது பெரிய நிறுவனமாக உருவெடுத்து இருக்கிறது. மேலும் மஸ்க் அகர்வாலை தவிர ட்விட்டரில் சட்ட, கொள்கை மற்றும் நம்பிக்கையின் தலைவரான விஜயா காடே மற்றும் மேலும் இரண்டு முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | கூண்டை விட்டு பறந்த பறவை... டிவிட்டரை கைப்பற்றினார் எலான் மஸ்க்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ