EPFO : 7 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சில முக்கிய சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. உறுப்பினர்கள் தங்கள் வருங்கால வைப்பு நிதியை மிகவும் திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதில் ஓய்வூதிய நிதி அமைப்பு மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS) செயலாக்கம், உறுப்பினர்களுக்கான அதிக ஓய்வூதியம் தொடர்பான கொள்கைகளில் நடவடிக்கை, உறுப்பினர் சுயவிவரம் தொடர்பான ஆன்லைன் புதுப்பிப்பு வசதி, PF பரிமாற்றங்களை எளிதாக்குதல் ஆகியவை அடங்கும்.
மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை
இந்தியா முழுவதும் உள்ள EPFO அமைப்பின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய கட்டண முறை (CPPS) முழுமையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு EPFO முக்கியமான வசதியை வழங்கியுள்ளது. இப்போது ஓய்வூதியதாரர்கள் நாட்டில் உள்ள எந்த கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையை பெற முடியும். 1995 ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் CPPS செயல்முறை 2024 டிசம்பர் மாதத்தில், முழுமையாக செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் EPFO அமைப்பின் ஓய்வூதியம் வழங்கும் 122 பிராந்திய அலுவலகங்களில் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் சுமார் ரூ.1,570 கோடி ஓய்வூதியத்தை வழங்கியது. புதிய வசதியின் கீழ் ஓய்வூதியதாரர்கள் நேரில் சென்று உறுதிபடுத்தும் தேவையையும் நீக்கி ஓய்வூதிய விநியோக செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
அதிக ஓய்வூதியம் குறித்து தெளிவுபடுத்தல்
2022ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, அதிக ஓய்வூதியத்தைத் தேர்வுசெய்த சந்தாதாரர்களின் நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்த விஷயத்தை EPFO அமைப்பின் மத்திய அறங்காவலர் குழுவின் (CBT) நிர்வாகக் குழு (EC) கடந்த வாரம் எடுத்துக்கொண்டது. CBT என்பது EPFO இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பாகும். வட்டி விகிதங்கள், முதலீடுகள் மற்றும் புதிய அமைப்புகளின் மேம்பாடு உள்ளிட்ட பிற பிரச்சினைகள் குறித்த முடிவுகளில் இந்த அமைப்பு இறுதி அதிகாரம் செலுத்தும்.
கடந்த மாதத்தில் 100,000 க்கும் மேற்பட்ட வழக்குகளில் நிலுவையில் உள்ள அதிக ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களை விரைவாக ஆய்வு செய்தல், கள அலுவலகங்களை தொடர்ந்து கண்காணித்து 21,000 கோரிக்கை கடிதங்களை வழங்குதல் மற்றும் தெளிவுபடுத்தல்களை வழங்குதல் குறித்து CBTயின் நிர்வாகக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் திருத்தத்தை விரைவுபடுத்துவதற்காக முதலாளிகளுடன் வழக்கமான "வீடியோ கான்ஃபரென்ஸ்" நடத்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
EPFO உறுப்பினர்களின் சுயவிவர புதுப்பிப்பு
ஆதார் மூலம் ஏற்கனவே யுனிவர்சல் கணக்கு எண் (UAN) சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் சுயவிவர தகவல்களில் பெயர், பிறந்த தேதி, பாலினம், தேசியம், தந்தை/தாயின் பெயர், திருமண நிலை, மனைவி பெயர், சேர்ந்த தேதி மற்றும் வேலையில் இருந்து விலகிய தேதி ஆகியவற்றை எந்த ஆவணத்தையும் பதிவேற்ற வேண்டிய அவசியமின்றி புதுப்பிக்க EPFO இப்போது அனுமதிக்கும். அக்டோபர் 1, 2017 க்கு முன் UAN பெறப்பட்ட கணக்குகளில் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, புதுப்பிப்புக்கு முதலாளியின் சான்றிதழ் தேவைப்படும்.
PF கணக்கை மாற்றுதல்
வேலைகளை மாற்றும் EPFO உறுப்பினர்களுக்கான PF கணக்குகளை மாற்றுவதற்கான PF எக்ஸ்சேஞ்ச் நடைமுறையையும் ஓய்வூதிய நிதி அமைப்பு எளிமைப்படுத்தியுள்ளது. வேலைகளை மாற்றும் ஊழியர்களுக்கு புதிய விதிமுறை மிகவும் உதவியாக இருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முந்தைய அல்லது தற்போதைய முதலாளி மூலம் ஆன்லைன் பரிமாற்ற கோரிக்கைகளை அனுப்ப வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், எதிர்காலத்தில், மொத்த 1.30 கோடி எக்ஸ்சேஞ்ச் கோரிக்கைகளில் 1.20 கோடிக்கும் அதிகமானவை, அதாவது மொத்த கோரிக்கைகளில் 94%, முதலாளியின் தலையீடு இல்லாமல் நேரடியாக EPFO-க்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ