மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கிடும் சூத்திரம் மாறுகிறதா?

Dearness Allowance Calculation: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரம் மாற்றப்படுமா? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 25, 2025, 02:27 PM IST
  • மத்திய அரசு ஊழியர்களின் வேண்டுகோள் என்ன?
  • அகவிலைப்படி கணக்கீட்டு முறை சமமாக இல்லை என புகார்.
  • என்ன மாற்றம் எதிர்பார்கப்படுகின்றது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி: டிஏ கணக்கிடும் சூத்திரம் மாறுகிறதா? title=

Dearness Allowance Calculation: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது அவர்களது சம்பளத்தில் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரண கணக்கீட்டிற்கான சூத்திரத்தை மாற்றுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களின் வேண்டுகோள் என்ன?

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணவீக்கத்திற்கு ஏற்ப அகவிலைப்படியை திருத்த வழிவகை செய்யுமாறு கெட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) கீழ், தற்போது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் 6 மாதங்களுக்கு ஒரு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தப்படுகின்றன. மத்திய அமைச்சரவை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.பி. யாதவ், ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு முறையே அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலைப்படி நிவாரணம் (Dearness Relief) கணக்கீட்டை மேம்படுத்துமாறு வலியுறுத்தினார்.

DA Calculation: அகவிலைப்படி கணக்கீட்டு முறை சமமாக இல்லை என புகார்

இந்தக் கடிதம் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீட்டு முறையில் உள்ள சமத்துவமின்மையை பற்றி குறிப்பிட்டுள்ளது. அரசு வங்கிகள் உட்பட பிற பொதுத்துறை பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரம் மத்திய அரசின் பிற துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரத்திலிருந்து வேறுபட்டது. 

என்ன மாற்றம் எதிர்பார்கப்படுகின்றது?

12 மாத சராசரியை மூன்று மாத சராசரியாக மாற்ற வேண்டும் என்று கூட்டமைப்பு பரிந்துரைத்தது. அதாவது, பொதுத்துறை மற்றும் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களைப் போலவே, மற்ற துறைகளின் ஊழியர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப இழப்பீடு பெறும் வகையில் அகவிலைப்படியில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

DA Calculation Formula

பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் பிற மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கணக்கீட்டு சூத்திரம்

அகவிலைபப்டி = { (கடந்த 12 மாதங்களுக்கான AICPI சராசரி (அடிப்படை ஆண்டு 2016=100) – 115.76)/115.76 } x 100

Public Sector Employees: பொதுத்துறை ஊழியர்களுக்கு

DA = { (கடந்த 3 மாதங்களுக்கான AICPI சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) – 126.33)/126.33 } x 100

கணக்கீட்டு முறையில் சீரான தன்மையைக் கொண்டு வருவதை வலியுறுத்தி, வங்கி ஊழியர்களின் அகவிலைப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படுகிறது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு ஊழியர்கள் ஆறு மாதங்களுக்கு 0.9 சதவீத அகவிலைப்படியை இழந்து வருகின்றனர் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வங்கி மற்றும் எல்.ஐ.சி ஊழியர்கள் அகவிலைப்படி பெறுவது போன்ற அதே வழியில் மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) அகவிலைப்படியை பெற வேண்டும் என கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Budget 2025: காப்பீட்டு துறையின் எதிர்பார்ப்புகள் என்ன? 80C, 80D வரி விதிகள் மாறுமா?

மேலும் படிக்க | EPFO 3.0: மொபைல் செயலி முதல் ஏடிஎம் கார்டு வரை... PF உறுப்பினர்களுக்கு புத்தம் புதிய வசதிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News