அமெரிக்காவின் காலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 10க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய 72 வயதான ஹூ கேன் டிரான் என்பவர் ஒரு வேனில் உயிரிழந்த நிலையில், போலீசாரால் கண்டெடுக்கப்பட்டார். அவர் போலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டதால், தன்னையை தானே சுட்டுக்கொண்டார் என கூறப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள மான்டேரி பார்க் நகரில், சனிக்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி) நூற்றுக்கணக்காணோர் சீன புத்தாண்டை வரவேற்கும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுப்ட்டிருந்தனர். அப்போது, 72 வயதான அந்த நபர் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதை அடுத்து போலீசார் அவரை சுற்றிவளைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுரித்து லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி செரிஃப் ராபர்ட் லூனா கூறுகையில்,"தாக்குதல் தொடுத்த நபர் தன்னை சுட்டுக்கொண்ட காயத்துடன் கண்டெடுக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்தில் வேறு யாரும் தாக்குதல் தொடுக்கவில்லை என உறுதியாகவில்லை. ஆனால், துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் தெரியவில்லை. விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கண்காணிப்பு கேமாராக்களை சோதனை செய்து வருகிறோம். தாக்குதல் தொடுத்தவர் ஒரு குறிப்பிட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தினாரா என்பது குறித்து தெரியவில்லை. இது குறிப்பாக சட்டத்தால் வரையறுக்கப்பட்ட வெறுப்புக் குற்றமா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், யார் நடன அரங்கிற்குள் நுழைந்து 20 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்கள்?
இந்த தாக்குதலை அடுத்து, அமெரிக்க தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படி அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருந்தார். இரண்டு நாள் விழாவான, சீன புத்தாண்டு கொண்டாட்டம், இந்த தாக்குதலை அடுத்து இரண்டாவது நாள் கொண்டாட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.
முன்னதாக, கடந்தாண்டு மே மாதம், டெக்சாஸ் நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதன்பின், தற்போது இந்த தாக்குதல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். இது அவர்களின் தற்கொலை எண்ணிக்கையில் இரு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ