உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோய், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் குறைந்த அளவில் பரவி வருகிறது. இந்த குரங்கு அம்மை வைரஸ் தைவான் மற்றும் கொலம்பியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இந்தியாவில், சில சந்தேகத்திற்கிடமான சில தொற்று பாதிப்புகள் இருப்பதாக அறிக்கைகள் இருந்தாலும், அது இன்னும் கண்டறியப்படவில்லை. அவர்கள் அனைவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை
போர்ச்சுகலில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து கூறுகையில், இந்த வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவுவதால் முன்பை விட அதிக வீரியமாக மாறக்கூடும் என்கின்றனர். தற்போதைய குரங்கு அம்மை பரவல் குறித்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 24) வெளியிடப்பட்ட நேச்சர் மெடிசின் ஆய்வில், வைரஸின் மரபணு குறியீடு, மரபணு ஆகியவற்றில் சிறிய மாற்றங்கள் இருப்பதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லிஸ்பனில் உள்ள தேசிய சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த ஜோவா பாலோ கோம்ஸ் கூறுகையில், 'பல பிறழ்வுகளைக் கண்டறிவது எதிர்பாராதது' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்
சண்டே மார்னிங் ஹெரால்ட் மேற்கோள் காட்டியபடி, அறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான ஜோவா பாலோ கோம்ஸ் இது குறித்து கூறுகையில், “குரங்கு அம்மை வைரஸில் இவ்வளவு பிறழ்வுகளைக் கண்டறிவது மிகவும் எதிர்பாராதது. உண்மையில், இந்த வகை வைரஸின் மரபணு பண்புகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு பிறழ்வுகளுக்கு மேல் வெளிவர வாய்ப்பில்லை” என்றார்.
கோவிட்-19 போலல்லாமல், குரங்கு பாக்ஸ் வைரஸ் அவ்வளவு வேகமாக மரபணு பிறழ்வு ஏற்படுவதில்லை என்றும், எளிதில் பரவுவதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பிறழ்வுகள் வைரஸின் பரவலின் போக்கை அல்லது அதன் விளைவுகளை எந்த வகையில் மாற்றும் என்பது குறித்து அவர்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மங்கி பாக்ஸ் வைரஸின் சமீபத்திய பரவல் தற்போது உலகளாவிய சுகாதார அவசரநிலை அல்ல என்று உலக சுகாதார அமைப்பும் முடிவு செய்துள்ளது. சனிக்கிழமை (ஜூன் 25) ஒரு அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு WHO இந்த ஆண்டு 50 நாடுகளைத் தாக்கியுள்ள குரங்கு காய்ச்சலை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று கூறியது.
அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், "ஒரு சில உறுப்பினர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில், இந்த கட்டத்தில் பரவல் உலகளாவிய சுகாதார அவசரநிலை அல்ல என்று WHO தலைமை செயலருக்கு ஆலோசனை வழங்கும் குழு ஒருமித்த கருத்துடன் தீர்மானித்தது" என்று WHO தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR