கொரோனா பரவல் தொடங்கி கிட்ட இரு ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்புகள் உலகம் எங்கும் படிப்படியாக குறைந்து வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் விமான நிலையங்களிலும் விமானங்களிலும் மாஸ்க் அணிவது இனி கட்டாயமாக இருக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் புதன்கிழமை கூறியது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விமான போக்குவரத்து பாதுகாப்பு நிறுவனம், நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையத்துடன் இணைந்து எடுத்த முடிவு, பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு "விமானப் பயணத்தை இயல்பாக்குவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக" குறிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தது.
மேலும் படிக்க | இலங்கையிலிருந்து தப்பித்த சிறை கைதிகள் - தமிழகத்திற்கு உளவுத்துறை எச்சரிக்கை..!
தொற்று நோய் பாதிப்புகள் சமீபத்தில் குறைந்து வருவதை கணக்கில் கொண்டு, குறிப்பாக தடுப்பூசியின் டோஸ்கள் மற்றும் இயற்கையாகப் பெற்ற நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்திருப்பதாக என்று இரு நிறுவனங்களும் ஒரு கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளன.
"பயணிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் மற்றும் தங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்" என்று EASA நிர்வாக இயக்குனர் பேட்ரிக் கூறினார். மேலும் இருமல் மற்றும் தும்மல் உள்ள பயணிகள், அருகில் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பிற்காக மாஸ்க் அணிவதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
கொரோனா நெறிமுறைகள் தொடர்பான புதிய பரிந்துரைகள் மே 16 முதல் அமலுக்கு வரும். கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி ஆகியவை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் ஆண்ட்ரியா அம்மோன் கூறினார்.
மேலும் படிக்க | கலவரத்தை அடக்க இலங்கை விரைகிறதா இந்திய ராணுவம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR