ஹாங்காங் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்க சீன தயாராகியுள்ளது!

2019-ல் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு, சீனா இப்போது தீவு தேசத்தின் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கத் தயாராக உள்ளது.

Last Updated : May 22, 2020, 07:23 AM IST
  • புதிய சட்டம் ஹாங்காங்கின் நிலப்பரப்பில் அனுமதிக்கப்படாத பல சுதந்திரங்களை முடிவுக்குக் கொண்டு வந்து முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் மீது சீனாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுக்கும்.
  • இந்த சட்டம், பிரிவினை, வெளிநாட்டு தலையீடு, பயங்கரவாதம் மற்றும் மத்திய அரசைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து தேசத்துரோக நடவடிக்கைகளையும் தடை செய்யும்
ஹாங்காங் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்க சீன தயாராகியுள்ளது! title=

2019-ல் ஹாங்காங்கை உலுக்கிய ஜனநாயக சார்பு போராட்டங்களுக்குப் பிறகு, சீனா இப்போது தீவு தேசத்தின் மீது ஒரு புதிய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை விதிக்கத் தயாராக உள்ளது.

நாடாளுமன்றம் அதன் ஆண்டு கூட்டத்தொடரை வெள்ளிக்கிழமை நடத்திய பின்னர் இந்த சட்டம் குறித்த விவரங்கள் வழங்கப்படும் என்று சீனாவின் தேசிய மக்கள் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் ஜாங் யேசுய் தெரிவித்துள்ளார்.

"புதிய சூழ்நிலைகள் மற்றும் தேவைகளின் வெளிச்சத்தில், தேசிய மக்கள் காங்கிரஸ் (NPC) அதன் அரசியலமைப்பு அதிகாரத்தை பயன்படுத்துகிறது" ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பைப் பாதுகாக்க ஒரு புதிய சட்ட கட்டமைப்பையும் அமலாக்க பொறிமுறையையும் நிறுவுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், சீனாவின் திட்டத்தின் விவரங்கள் "இதுவரை யாருக்கும் தெரியாது". "அது நடந்தால் நாங்கள் அந்த பிரச்சினையை மிகவும் வலுவாக நிவர்த்தி செய்வோம்," என்று தெரிவித்தார். 

நவம்பர் மாதத்தில் மறுதேர்தலை எதிர்பார்க்கும் டிரம்ப், சீனா மீதான தனது தாக்குதல்களை தற்போது உயர்த்தியுள்ளார் என்பது அவரது வார்த்தைகள் மூலம் தெரிகிறது.

2019-ஆம் ஆண்டில், டிரம்ப் "ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சட்டத்திற்கு" ஒப்புதல் அளித்தார், இது அமெரிக்காவுடன் சாதகமான வர்த்தக விதிமுறைகளை நியாயப்படுத்த போதுமான சுயாட்சியை ஹாங்காங் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பதை வெளியுறவுத்துறை சான்றளிக்க வேண்டும்.

புதிய சட்டம் ஹாங்காங்கின் நிலப்பரப்பில் அனுமதிக்கப்படாத பல சுதந்திரங்களை முடிவுக்குக் கொண்டு வந்து முன்னாள் பிரிட்டிஷ் காலனியின் மீது சீனாவுக்கு கூடுதல் கட்டுப்பாட்டைக் கொடுக்கும்.

ஹாங்காங் அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இந்த நடவடிக்கை குறித்த பேசுகையில்., இது தொடர்பான விவரங்கள் தெளிவாக இல்லை, ஆனால் ஹாங்காங் ஊடகங்கள் இந்த சட்டம் பிரிவினை, வெளிநாட்டு தலையீடு, பயங்கரவாதம் மற்றும் மத்திய அரசைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து தேசத்துரோக நடவடிக்கைகளையும் தடை செய்யும் என்று தெரிவித்துள்ளது.
 
இந்த நடவடிக்கை ஒரு நிதி மையமாக அதன் நற்பெயரை கடுமையாக பாதிக்கும் என்று ஹாங்காங்கில் உள்ள எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். "இந்த நடவடிக்கை நடந்தால்,` ஒரு நாடு, இரண்டு அமைப்புகள்` அதிகாரப்பூர்வமாக அழிக்கப்படும் "என்று ஜனநாயக சட்டமன்ற உறுப்பினர் டென்னிஸ் குவோக் கூறினார். "இது ஹாங்காங்கின் முடிவு" என்று அவர் விமர்சித்துள்ளார்.

ஹாங்காங்கின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டால், அது அமெரிக்காவிற்கு ஒரு பெரிய அடியாக இருக்கும், ஏனெனில் அங்கு வசிக்கும் குடிமக்களில் குறைந்தது 85,000 பேர் 2018-ஆம் ஆண்டில் ஹாங்காங்கில் வசித்து வந்தனர், மேலும் 1,300 க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் அங்கு செயல்படுகின்றன, இதில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பெரிய அமெரிக்க நிதி நிறுவனமும் பங்குகளை வைத்துள்ளது.

Trending News