ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காந்தஹார் விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு படைகள் ஆப்கானி்ஸ்தானிலிருந்து (Afghanistan) வெளியேறியதை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாலிபான் (Taliban) ஒவ்வொரு நகரமாக ஆப்கானிஸ்தான் முழுவதையும் தன் வசப்படுத்தியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி நாட்டை விட்டு வெளியேறினார்.
தாலிபான்கள் நாடு தழுவிய இராணுவ வெற்றியை உறுதிப்படுத்திய பின்னர் அதிபர் கானியுடன் நாட்டின் பல முக்கிய தலைவர்களும் நாட்டை விட்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாலிபான் கிளர்ச்சிக் குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பராதர் ஆப்கானிஸ்தனின் புதிய அதிபராகக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதனைத் தொடர்ந்து, மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இனிவரும் நாள்களில் ஒருவேளை ஆப்கனில் நிலைமை மோசமடையும் பட்சத்தின் ஆப்கனில் வசிக்கும் மற்ற இந்தியர்களையும் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு நிலைமையை கவனித்து வருகிறது. அதன்படி ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக, ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானத்தை இயக்கியது. இதன்படி ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சென்றது. அங்கிருந்து 129 பேர்களுடன் புறப்பட்ட அந்த விமானம் டெல்லி வந்து சேர்ந்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய பிறகு ஆயிரக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், விமான நிலையத்தில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது.
இதனால் காபூலில் இருந்து பயணிகளின் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நாட்டை விட்டு வெளியேற நினைத்த மக்கள், விமானநிலையத்திலே செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க படையினரால் காபூல் விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரப்பரப்புகளிடையே ஆப்கான் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால், இன்று ஆப்கான் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ALSO READ | தாலிபான் வசமாகும் ஆப்கானிஸ்தான்; இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR