இன்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட விஷயங்களுக்கு தினம் கொண்டாடி வருகிறார்கள் மனிதர்கள். அந்த வகையில் இன்று உலக இட்லி தினம்.
உலக அளவில் அட்டகாசமான உணவுகளைப் பட்டியலிட்டால் அதில் இட்லினிக்கு தனி இடம் கிடைக்கும். காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான உணவு இட்லி.
எந்த உணவாக இருந்தாலும் சரி, இட்லியை அடித்துக் கொள்ள இதுவரை எந்த உணவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக தமிழர்களுக்கு இட்லியும் சாம்பார், சட்னியும் இல்லாவிட்டால் அன்றைய நாள் பெரிய சோக நாள்தான்.
மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் முக வடிவத்தில் 68 கிலோ எடையில் இட்லி செய்து சென்னை மெரீனா பீச்சுக்கு அதிமுக தொண்டர்கள் கொண்டு வந்தனர்.
கடந்த 5-ம் தேதி தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பால் காலமானார். இந்நிலையில் மெரீனா பீச்சில் எம்.ஜி.ஆர்., நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அவர் நினைவிடத்தில் இன்று வரை பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.