Patanjali Foods, Red Chilli Packets Recalls: பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் பரந்தளவில் உணவுகள், எண்ணெய் ஆகியவற்றை பேக்கேஜிங் செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. பதஞ்சலி நிறுவனத்தின் நூடுல்ஸ், பிஸ்கட் ஆகியவை மிகவும் பிரபலமானது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் கீழ் இந்த பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது.
இந்த நிறுவனம் பிரபல யோகா குரு பாபா ராம்தேவ்வின் நிறுவனம் ஆகும். பாபா ராம்தேவ்வின் புகைப்படத்துடன்தான் இந்த நிறுவனங்களில் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், பதஞ்சலியின் தயாரிப்புகள் அனைத்தும் இயற்கையான பொருள்களால் செய்யப்படுபவை என்றும் நுகர்வோரிடம் விளம்பரப்படுத்தப்படுகிறது.
4 டன் மிளகாய் தூளை திரும்பப் பெறும் பதஞ்சலி
அப்படியிருக்க, தற்போது பதஞ்சலி நிறுவனம் அதன் 200 கிராம் மிளகாய் பொடி பாக்கெட்டுகளை அதாவது சுமார் 4 டன்கள் அளவிலான பாக்கெட்டுகளை விற்பனை நிலையங்களில் இருந்து திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. இது நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேலும் படிக்க | குடியரசு தினம் என்றால் என்ன? இந்தியாவில் 'ஜனவரி 26' குடியரசு நாள் ஆனது எப்படி?
பதஞ்சலி திரும்பப் பெற காரணம் என்ன?
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின்ஸ விதிகளை பின்பற்றாததால் பதஞ்சலி அதன் மிளகாய் பொடி பாக்கெட்டுகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டது. பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான அந்த மிளகாய் பொடியின் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
இதன் காரணமாகவே FSSAI அதனை திரும்பப் பெற்றுக்கொள்ள பதஞ்சலி நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது. மிளகாய் தூள் மட்டுமின்றி பல்வேறு உணவுப் பொருட்களுக்கான பூச்சிக்கொல்லி அளவுக்கு அதிகபட்ச வரம்புகளை FSSAI நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை மீறினால்தான் பிரச்னை என்றும் கூறப்படுகிறது.
பதஞ்சலி நிறுவனம் கூறுவது என்ன?
இதனை பதஞ்சலி நிறுவனமும் நேற்று (ஜன. 24) உறுதிப்படுத்தி உள்ளது. இதுகுறித்து பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் அஸ்தானா இதுகுறித்து தெரிவிக்கையில்,"குறிப்பிட்ட ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்க, எங்கள் நிறுவனம் அதன் விநியோக நிலையங்களின் கூட்டாளர்களுக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த பொருள்களை வாங்கிய நுகர்வோரைச் சென்றடைய விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும், அவர்கள் பொருள்களை வாங்கிய இடத்திற்கே சென்று, அதனை திருப்பி கொடுத்து முழுப் பணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள வலியுறுத்தி உள்ளோம்" என்றார். மேலும், விற்பனை நிலையங்களில் இருந்து திரும்பப் பெறும் பொருள்களின் மதிப்பும், அளவும் மிகவும் சிறியதுதான் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | குடியரசு தின விழா: இந்த ஆண்டு அலங்கார ஊர்திகளின் கருப்பொருள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ