கூட்டுறவுத்துறையில் மகளிர் வாங்கும் கடன்களை நேர்மையாக திருப்பி செலுத்தி வருகிறார்கள் என தமிழக அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று 68-வது கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் பங்கேற்றனர். சிறு வணிக கடன், மகளிர் சுய உதவி குழு கடன், வேளாண்மை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள், 1,151 நபர்களுக்கு ரூ 10 கோடி மதிப்பில் கடன் உதவிகள் ஆகியவற்றை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறையில் பணிபுரிபவர்கள் நேர்மையாக பணி புரிய வேண்டும் எனவும், தவறு செய்பவர்கள் யாராயிருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார். கைது செய்யப்பட்டு சிறைச்சாலைக்கு செல்லும் நபர்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த வகையில் சிறைச்சாலை என்பது ஆராய்ச்சி சாலையாக மாறிவிடுகிறது என்றார்.
கூட்டுறவுத் துறையால் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. கூட்டுறவுத்துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் நல்ல திட்டங்கள் தான். ஆனால் அதனை செயல்படுத்துவதில் தான் பல குறைகள் உள்ளன. அந்தக் குறைகள் களையப்பட வேண்டும். அதற்கு கூட்டுறவுத் துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் பொறுப்பாளர்களும் நேர்மையாக பணியாற்ற வேண்டும்.
ALSO READ:கோவை: குடிபோதையில் அலுவலகம் வந்த அரசு ஊழியர்
கடந்த ஆட்சியில் போலி நகைகள் மற்றும் போலி ஆவணங்கள் வைத்து கூட்டுறவு வங்கிகளில் (Cooperative Banks) கடன் பெற்றுள்ளனர். அவ்வாறு கடனுதவிகள் பெற்றவர்கள் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள். அந்த முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.
கூட்டுறவுத்துறையில் மகளிர் வாங்கும் கடன்கள் நேர்மையாக திருப்பி செலுத்தி வருகிறார்கள். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் நடப்பாண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் 87 ஆயிரத்து 443 விவசாயிகளுக்கு (Farmers) 617 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக கூறினார்.
ஐந்து சவரன் உட்பட்ட கடன் தள்ளுபடியில் 2 லட்சத்து 476 உறுப்பினர்களுக்கு 160 கோடி ரூபாய் அளவிற்கு பொது நகை கடன் (Gold Loan) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் இறுதிவரை 25 ஆயிரத்து 803 விவசாயிகளுக்கு 170 கோடி அளவிற்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளில் எங்கு ஆக்கிரமிப்பு செய்து இருந்தாலும் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும். மேலும் வேலூர் மாவட்டம் அகரம் ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்பை மாவட்ட ஆட்சியர் உடனடியாக அகற்ற வேண்டும் என அமைச்சர் கூறினார்.
இந்த விழாவில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ALSO READ: ஆன்லைன் தேர்வு நடத்த கோரி போராட்டம் நடத்திய 700 மாணவர்கள் மீது வழக்கு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR