புதுடில்லி: ஆதார் அட்டையைப் போலவே, உங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளும் அடுத்த ஆண்டு டிஜிட்டலாகும். இது முழுமையான டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைப்பது போன்றதாகும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
வாக்காளர் அடையாள அட்டைகளை டிஜிட்டல் ஆக்குவதற்கான யோசனையை இந்திய தேர்தல் ஆணையம் முன்வைத்து வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) அல்லது வாக்காளர் அடையாள அட்டையை எளிதாக பதிவிறக்கம் செய்யது கொள்ள முடியும் என ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
அடுத்த ஆண்டு (2021) ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் (Assembly Elections) நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னர் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்ததாக ஊடக அறிகைகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்திடமிருந்து (Election Commission) வரும் ஒப்புதலுக்காக வாக்கெடுப்பு குழு காத்திருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. புதிதாக பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களுக்கு இந்த வசதி தானாகவே கிடைத்துவிடும் என்றும், தற்போதுள்ள வாக்காளர்கள் வாக்காளர் ஹெல்ப்லைன் செயலி மூலம் ஒரு சில செயல்முறைகளை முடிக்க வேண்டி இருக்கும் என்றும் அந்த வட்டாரங்கள் மேற்கோளிட்டுள்ளன.
சரியான பரிசீலனையின் பின்னர், தேர்தல் ஆணையம் தனது ஒப்புதலைக் கொடுத்து இறுதித் திட்டத்தை வெளிப்படுத்த உள்ளது என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. தரவிறக்கம் செய்யக்கூடிய டிஜிட்டல் வாக்காளர் அட்டை (Voter ID Card) தவிர, தற்போதுள்ள ஈபிஐசி வசதியும் இருக்கும். இந்த திட்டத்தின் பின்னால் உள்ள முக்கிய நோக்கம் வாக்களர் அட்டைகள் கிடைக்கச் செய்வதை எளிதாக்குவதாகும்.
ALSO READ: அடுத்த கல்வி ஆண்டில் JEE தேர்வு 4 முறை நடத்தப்படும்: ரமேஷ் போக்ரியால்!
பதிவு செய்யப்பட்ட மொபைல் இணைப்பில் கார்டைப் பதிவிறக்கிய பிறகு புதிய வாக்காளர்கள் இந்த வசதியைப் பெறுவார்கள் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது. EPIC இன் டிஜிட்டல் வடிவத்தில் இரண்டு வெவ்வேறு QR குறியீடுகள் இருக்கும். ஒரு QR குறியீட்டில் வாக்காளரின் பெயர் மற்றும் பிற விவரங்கள் இருக்கும், இரண்டாவது குறியீடு வாக்காளரின் பிற குறிப்பிட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். கியூஆர் குறியீடுகளில் (QR Code) வைக்கப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் வாக்களிக்கும் உரிமையைப் பெற முடியும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த திட்டம் உருவானதும், சேவை மற்றும் வெளிநாட்டு வாக்காளர்களும் தங்கள் EPIC ஐ பதிவிறக்கம் செய்ய முடியும். தற்போது அவர்களுக்கு பிசிகல் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுவதில்லை. வேறு இடங்களுக்கு மாறி, புதிய வாக்குச் சாவடிகளில் தங்கள் பெயர்களைச் சேர்க்கவும் இந்த வசதி உதவியாக இருக்கும்.
இது தவிர, கார்டுகளை இழந்து புதிய கார்டுகளுக்கு விண்ணப்பித்த வாக்காளர்களும், புதிய அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.
ALSO READ: Petrol இல்லாமல் இனி கார்கள் ஓடும்: புதிய திட்டம் விரைவில் அறிமுகம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR