Crop Insurance | தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
Crop Insurance, Tamilnadu | பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்ய தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏற்கனவே விவசாயிகள் கடும் வறட்சி உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கால நிலை மாற்றத்தால் திடீரென வரும் மழை, புயல்களில் பயிர் சேதங்களை அனுபவிக்கின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகளால் பயிர் காப்பீடு திட்டம் (Crop Insurance) செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யுமாறு அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். எந்தெந்த பயிர்களுக்கு எவ்வளவு காப்பீடு தொகை செலுத்த வேண்டும் என்றும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ராபி 2024-25 பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். தற்பொழுது நவரை நெற்பயிருக்கு ஏக்கருக்கு குபாய் 518/- செலுத்த வேண்டும். பச்சைபயறு ஏக்கருக்கு ரூபாய் 298/-, எள் பயருக்கு ஏக்கருக்கு ரூபாய் 165/-, காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 17.02.2025 க்குள் நாப்பீடு செய்துகொள்ளலாம்.
நிலக்கடலை ஏக்கருக்கு ரூபாய் 462/- காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 31.01.2025 க்குள் காப்பீடு செய்துகொள்ளலாம். கரும்பு பயறுக்கு ஏக்கருக்கு ரூபாய் 1200/- காப்பீட்டுக் கட்டணமாக செலுத்தி 31.03.2025 க்குள் பயிர் காப்பீடு செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
எனவே மேற்குறிப்பிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்களிலோ / தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ / பொது சேவை மையங்களிலோ (இ சேவை மையங்கள்) நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு செய்யலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ - சேவை மையங்கள்) பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் / தேசியமயமாக்கப்பட்ட வங்களில் இந்த ரசீதுகளை பெற்றுக்கொள்ளலாம், பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ளவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.