Vellore Tamil Nadu Lok Sabha Election Result 2024 : தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நடைப்பெற்று முடிந்தது. இதில், முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி, நடைப்பெற்றது. பரபரப்பாக 7 கட்டமாக நடைப்பெற்ற இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில்தான் நடைப்பெற்றது. இறுதியில், 7 ஆம் கட்டம் பல்வேறு மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடைப்பெற்றது. இத்தேர்தலின் நிலவரம் தற்போது வெளிவர இருக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் தேர்தல் முடிவுகள் வெளி வரவிருக்கின்றன. இதில், தமிழகத்தின் 8வது சட்டமன்ற தொகுதியாக இருக்கும் வேலூரில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
வேலூர் சட்டமன்ற தொகுதி:
வேலூர் மக்களவை தொகுதியில், மொத்தம் வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் உள்ளிட்ட தொகுதிகள் இருக்கின்றன. இதில், குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் ஆகியவை தனித்தொகுதிகளாக இருக்கின்றன. இந்த தொகுதியில் இஸ்லாமியர்கள், அதாவது சிறுபான்மையினரின் வாக்குகள் அதிகமாக இருக்கின்றன.
வாக்கு சதவீதம்:
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூரில் 73.53 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில், மொத்த வாக்காளர்கள் :15,28,273 பேர், ஆண் வாக்காளர்கள் : 7,40,222 மற்றும் பெண் வாக்காளர்கள் :7,87,838 , மூன்றாம் பாலினத்தவர் : 213
இதுவரை வென்றுள்ள கூட்டணிகள்:
வேலூர் மக்களவை தொகுதியில் இதுவரை திமுக கட்சி 5 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும், அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தலா இரண்டு முறையும் வெற்றியடைந்திருக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கட்சி சார்பில் போட்டியிட்ட கதி ஆனந்த் வெற்றி பெற்றார். அவரை அடுத்து, அதிமுகவை சேர்ந்த ஏ.சி.சண்முகம் 2ஆம் இடத்தை பெற்றார்.
இந்த ஆண்டு நடைப்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில், கதிர் ஆனந்த் திமுக சார்பிலும், அதிமுக சார்பில் பசுபதியும், பாஜக (புதிய நீதிக்கட்சி) சார்பில் ஏ.சி.சண்முகமும் போட்டியிட்டிருக்கின்றனர்.
வேட்பாளர்கள் பட்டியல்:
>திமுக-கதிர் ஆனந்த்
>அதிமுக-பசுபதி
>பாஜக(புதிய நீதிக்கட்சி)-ஏ.சி.சண்முகம்
>நாம் தமிழர் கட்சி-தி.மகேஷ் ஆனந்த்
வெற்றி யார் பக்கம்?
வேலூரில், சிறுபான்மையினரின் வாக்கு வங்கி நிறைய இருப்பதால் இங்கு பாஜக கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது. திமுக அல்லது நாம் தமிழர் கட்சி ஆகியவற்றிற்கு இடையே கடும் போட்டி நிகழும் என்றும், திமுக ஜெயிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ