ரோட்டில் சென்றவரிடம் சாவியைப் பறித்து வீட்டை கொள்ளையடித்த பலே கும்பல்!

திருச்சி அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்தவரை மர்ம நபர்கள் மிரட்டி  சாவியை பறித்து சென்று அவரின் வீட்டை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Jul 5, 2022, 03:33 PM IST
  • வீட்டின் பீரோ சாவி எங்கு உள்ளது என கேட்டு கத்தியால் குத்தி சித்திரவதை செய்துள்ளனர்.
  • பீரோவில் இருந்த ரூபாய் 12 லட்சம், 6 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றை திருட்டு.
ரோட்டில் சென்றவரிடம் சாவியைப் பறித்து வீட்டை கொள்ளையடித்த பலே கும்பல்! title=

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கனரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. 

இந்நிலையில் நேற்று காலை தா.பேட்டை அருகே உள்ள வளையெடுப்பு கிராமத்திற்கு முத்துசாமி அவரது உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக மெபட்டில் சென்றுள்ளார். பின்னர் மீண்டும் மொபட்டில் தா.பேட்டை நோக்கி வந்துள்ளார். 

அப்போது காரில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 5 பேர் முத்துசாமியின் கைகள் மற்றும் கண்களை கட்டி காரில் தூக்கி போட்டுக்கொண்டு கடத்தி சென்றனர். 

நேற்று பகல் மற்றும் இரவு முழுவதும் ஓர் அறையில் அடைத்து வைத்து வீட்டின் பீரோ சாவி எங்கு உள்ளது என கேட்டு கத்தியால் குத்தி சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் முத்துசாமியிடம் இருந்த வீட்டின் சாவியை பறித்துக் கொண்டு வந்த இரு கொள்ளையர்கள் நள்ளிரவில் முத்துசாமியின் வீட்டை திறந்து பீரோவில் இருந்த ரூபாய் 12 லட்சம், 6 பவுன் மதிப்புள்ள தங்க நகைகள் ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். 

மேலும் படிக்க | ‘Gay love Story’ எடுப்பது குற்றமா?- ‘RRR’க்கு ஆதரவாகக் கொந்தளித்த பாகுபலி புரொடியூஸர்!

இன்று அதிகாலை துறையூர் அருகே உள்ள சிக்கதம்பூர் பகுதியில் முத்துசாமியை விடுவித்துவிட்டு வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். 

இதையடுத்து தா.பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முத்துசாமி சம்பவம் குறித்து தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர். முத்துசாமியின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து மோப்ப நாய் லாலி மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர். 

பட்டப் பகலில் ஓய்வு பெற்ற வங்கி கேசியரை கடத்தி சென்று கட்டிப்போட்டு, அவரது வீட்டில் நுழைந்து பணத்தை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | ஆமா, இது ‘ED’ கூட்டணி ஆட்சிதான்! ஆனா... ‘பொடி’ வைத்துப் பேசிய பட்னாவிஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News