Keerthy Suresh Talks About Her Husband : தமிழ் திரையுலகின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்கள் சினிமாவிற்குள் நுழைந்த இவர் வளர்ந்த பிறகு ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனது 15 ஆண்டு கால காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் தனது கணவர் குறித்து சில விஷயங்களை கீர்த்தி பகிர்ந்திருக்கிறார். இதன் முழு விவரத்தை இங்கே பார்ப்போம்.
கீர்த்தியின் திருமணம்:
நடிகை கீர்த்தி சுரேஷ், கடந்த டிசம்பர் மாதம் தனது பல ஆண்டு காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கோவாவில் தடபுடலாக நடைபெற்றது. இதில், கீர்த்திக்கு நெருக்கமான சில நண்பர்கள், திரை உலகினர் மற்றும் அவரது உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். முதலில் தமிழ் முறைப்படி இவரின் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கிறிஸ்தவ முறைப்படி, இன்னொரு முறை திருமணம் நடந்தது.
கீர்த்தி தாலி கட்டிக் கொண்ட போது மகிழ்ச்சி காலாமல் அழுத புகைப்படங்களும், மணமக்களுக்கு விஜய் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆனது. சமீபத்தில் தனது கணவருடன் இவர் தலைப்பொங்கல் கொண்டாடிய போட்டோக்களும் அதிக லைட்ஸ்களை பெற்றன. இந்த நிலையில் கீர்த்தி, தனது கணவர் குறித்து சில விஷயங்களை பேசி இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு பிறகு…
நடிகை கீர்த்தி, ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட போது தனது கணவர் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார். அதில் ஆண்டனி மிகவும் பிரைவேட் பர்சன் என்று கூறியிருக்கும் அவர் தனது Instagram பக்கத்தை கூட பிரைவேட் ஆக தான் வைத்திருப்பாராம். தனது கணவரை மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர் என்று குறிப்பிட்ட கீர்த்தி மீடியா அட்மிஷன் எல்லாம் அவருக்கு கிடையாது என்று கூறியிருந்தார். ஆனால் தனக்கு அது பழகி விட்டதாகவும் தான் எங்கு சென்றாலும் தன்னை எங்கு சென்றாலும் வீடியோ எடுப்பது போட்டோ எடுப்பது தனக்கு எப்போதும் போல் இருப்பதாகவும் பேசினார்.
இந்த விஷயம் தனது கணவருக்கு சங்கடத்தை கொடுத்ததாக கூறியிருக்கும் கீர்த்தி, இருப்பினும் இது எனது சினிமா வாழ்க்கைக்கு முக்கியமானது என்பதால் அவரது புரிந்து கொண்டதாகவும், அதற்கு ஏற்ப நடந்து கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
பிரைவேட்டான காதல்:
நடிகை கீர்த்தி, கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆண்டனியை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்பது திருமணத்திற்கு பிறகுதான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவருடன் நெருங்கி பழகிய சில திரை பிரபலங்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரியும் என கூறப்படுகிறது. அதில் ஒருவர் நடிகை சமந்தா. இவர்கள் இருவரும் மகாநதி படத்தில் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்தனர். தனிப்பட்ட வாழ்க்கையிலும் இருவரும் நெருங்கிய தோழிகளாக இருக்கின்றனர்.
தனது காதல் குறித்து யாரிடமும் சொல்லாத கீர்த்தி சமந்தாவிடம் மட்டும் கூறியிருக்கிறாராம். அவர் இந்த காதல் உறவிலும் சினிமா உலகிலும் பல விஷயங்களில் தன்னை வழி நடத்தியதாகவும் கீர்த்தி சுரேஷ் பேசியிருக்கிறார்.
பாலிவுட்டுக்கு தாவிய கீர்த்தி…
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த கீர்த்தி, சமீபத்தில் பாலிவுட்டுக்கும் தாவிவிட்டார். தெறி படத்தை பேபி ஜான் என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர். அந்தப் படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படம் பெரிதாக ஹிட் ஆகவில்லை என்றாலும், கீர்த்தி இந்தி திரையுலகில் கவனிக்கப்பட்ட நடிகையாக மாறிவிட்டார். இதனால் அடுத்தடுத்து வெவ்வேறு பட வாய்ப்புகள் இவர் வீட்டு கதவை தட்டும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷ்-ஆண்டனி தட்டில் வயது வித்தியாசம்! அடேயப்பா..இவ்வளவா?
மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷின் காதலன் இப்படிப்பட்ட ஆளா? முழு விவரத்தை இங்கே தெரிஞ்சிக்கோங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ