புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Kalaingar Magalir Urimai Thogai | புதிய ரேஷன் கார்டு வாங்கியவர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) திட்டத்துக்கு புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் விண்ணப்பிப்பது எப்படி? என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

1 /8

தமிழ்நாடு அரசு புதிய ரேஷன் கார்டு (Ration Card) விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கியது. சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் எல்லாம் டிசம்பர் மாத இறுதியில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

2 /8

அந்தந்த பகுதிகளில் இருக்கும் வட்டார உணவுப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் கொடுத்தவர்களின் தகவல்கள் அனைத்தும் உண்மையா? என பரிசீலனை செய்தனர். அதில் தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு ரேஷன் கார்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

3 /8

இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடங்க இருக்கிறது. அதிகபட்சம் பிப்ரவரி முதல் வாரத்தில் புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும். உங்கள் கையில் ரேஷன் கார்டு கிடைத்துவிட்டாலே கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

4 /8

ஆனால், அதற்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) வேண்டும் என்றால் அரசு நிர்ணயித்திருக்கும் தகுதிகள் அனைத்தும் உள்ளதா? என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் நேரடியாக கள ஆய்வு செய்த பிறகே மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

5 /8

ஒருவேளை கள ஆய்வில் நீங்கள் கொடுத்திருக்கும் தகவல் உண்மை இல்லை என்றால் உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அதற்கு முன்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

6 /8

புதிய ரேஷன் கார்டு வாங்கியவர்கள் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் இ-சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், மொபைல் எண், வங்கி பாஸ்புக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது.

7 /8

இ-சேவை மையத்தில் நீங்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவுடன் உங்களின் விண்ணப்பம் கிராம நிர்வாக அலுவலருக்கு வரும். அவர் விண்ணப்பம் மீது கள ஆய்வை மேற்கொள்வார். 

8 /8

அதில் உங்களின் தகவல் உண்மை என்றால் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்க அவர் பரிந்துரை செய்வார். அதன்படி தமிழ்நாடு அரசு கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை உயர்த்தும்போது உங்களின் விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படும்.