Post Office scheme | வங்கிகளைப் போலவே போஸ்ட் ஆபீஸ்களிலும் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. குறைந்த சேமிப்பு அதிக வருவாய் கொடுக்கும் திட்டங்களும் இருக்கின்றன. சாமானியர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை எல்லோரும் சேமிக்கும் வகையில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் மாதம் சேமிக்கும் தொடர் வைப்பு திட்டம். ரெக்கரிங் டெபாசிட் என சொல்வார்கள். இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்து ரூ.8 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். இந்த திட்டத்தின் கூடுதல் வசதி என்னவென்றால் உங்களின் சேமிப்பை காட்டி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு வட்டி
ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டியை 2023 ஆம் ஆண்டே மத்திய அரசு அதிகரித்துவிட்டது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யபவர்களுக்கு 6.7 சதவீதம் வட்டி கிடைக்கிறது. ஆனால், இதில் கவனத்தில்கொள்ள வேண்டியது என்னவென்றால் மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டுக்கும் வட்டி விகிதங்களை மாற்றும். அதனை பொறுத்தே உங்களின் முதலீடுகளுக்கான வட்டி கிடைக்கும்.
ரூ.8 லட்சம் பெறுவது எப்படி?
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு மற்றும் வட்டியைக் கணக்கிடுவது மிகவும் எளிதானது. இந்தத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.5000 மட்டும் சேமிப்பதன் மூலம் ரூ.8 லட்சம் நிதியை எவ்வாறு திரட்ட முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், அதன் முதிர்வு காலத்தில் அதாவது ஐந்து ஆண்டுகளில், நீங்கள் மொத்தம் ரூ.3 லட்சம் டெபாசிட் செய்திருப்பீர்கள். ரூ.56,830 வட்டியாக, அதாவது 6.7 சதவீத வட்டி கிடைக்கும். ஐந்து ஆண்டுகளில் உங்கள் சேமிப்பு தொகை ரூ.3,56,830 ஆக இருக்கும்.
இதனுடன் உங்கள் முதலீட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கலாம். அதாவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் அதை நீட்டித்தால், 10 ஆண்டுகளில் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகை ரூ.6,00,000 ஆக இருக்கும். இதனுடன், 6.7 சதவீத விகிதத்தில் இந்த வைப்புத்தொகையின் வட்டி தொகை ரூ.2,54,272 ஆக இருக்கும். இதன்படி, 10 ஆண்டுகளில் உங்கள் மொத்த டெபாசிட் நிதி ரூ.8,54,272 ஆக இருக்கும்.
கடன் பெறலாம்
நீங்கள் விரும்பினால் அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ் அலுவலகம் சென்று தொடர் வைப்புத் திட்டத்தில் ஒரு கணக்கைத் திறக்கலாம். அதில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் முதலீடு தொடங்கலாம். அஞ்சலக RDயின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள். முன்கூட்டியே கணக்கை மூடிக் கொள்ளும் வசதியும் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் இருக்கிறது. இந்த திட்டத்தில் சேர்ந்து ஒரு வருடம் முடிவடைந்திருந்தால் முதலீடு தொகையில் 50 சதவீதம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம். முதலீடு தொகைக்கு கிடைக்கும் வட்டியை விட கடனுக்கான வட்டி 2 சதவீதம் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ