Budget 2025: மக்களுக்கான மத்திய அரசு திட்டங்களில் முக்கியமான ஒரு திட்டம் அடல் ஓய்வூதியத் திட்டம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Union Budget 2025: கடந்த ஆண்டின் பட்ஜெட்டிலேயே அடல் ஓய்வூதியத் திட்டத்தின் தொகையை அரசு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடகவில்லை. எனினும், இந்த பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது ஏழைகளுக்கும், அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களின் வயதான காலத்தில் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது குறித்து பெண்கள், மாணவர்கள், நடுத்தர மக்கள், அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள் என பலதரப்பட்ட மக்களிடையே அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன.
மக்களுக்கான மத்திய அரசு திட்டங்களில் முக்கியமான ஒரு திட்டம் அடல் ஓய்வூதியத் திட்டம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) குறித்து அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை அரசாங்கம் இரட்டிப்பாக்க வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.
தற்போது, அடல் பென்ஷன் திட்டத்தில் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை வழங்கப்படுகின்றது. இதில் பயனாணிகளுக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும் என்பது அவர்களது பங்களிப்பைப் பொறுத்தது. சமூகப் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், ஓய்வூதியத் தொகையின் வரம்பை அரசு இப்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச உத்தரவாதத் தொகையை ரூ.10,000 ஆக உயர்த்தும் திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த ஆண்டின் பட்ஜெட்டிலேயே அடல் ஓய்வூதியத் திட்டத்தின் தொகையை அரசு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி நடகவில்லை. எனினும், இந்த பட்ஜெட்டில் இது அறிவிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) அரசாங்கத்தின் சார்பில் நடத்தப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இது ஏழைகளுக்கும், அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களின் வயதான காலத்தில் நிதி உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தில், பயணாளிகள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஏற்ப மாதந்தோறும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இந்த ஓய்வூதிய தொகை இப்போது அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடல் ஓய்வூதிய திட்டத்தில், பயனாளி இறந்தால், நாமினியாக பரிந்துரைக்கப்பட்டவருக்கு முழுப் பணமும் கிடைக்கும். அடல் ஓய்வூதிய திட்டத்தில் கணக்கைத் திறக்க, பயனாளிக்கு வயது 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களிடம் சொந்தமாக வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க, சேமிப்புக் கணக்கு உள்ள வங்கியில் இருந்து பதிவுப் படிவத்தைப் பெற வேண்டும். அல்லது வலைத்தளத்திலிருந்து படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
அதன் பின்னர், படிவத்தில் விவரங்களை நிரப்பி, ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் படிவத்தை ஆதார் அட்டை மற்றும் பிற தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.