சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலர்களின் பட்டியல் இங்கே.
நேற்று (ஜன.23) நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது அர்ஷ்தீப் சிங் அதிக விக்கெட்களை எடுத்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
61 டி20 போட்டிகளில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 97 விக்கெட்களை கைப்பற்றி சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
யுஸ்வேந்திர சாஹல் தான் இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற பெருமையுடன் இருந்தார். அதனை நேற்று அர்ஷதீப் சிங் முறியடித்தார். சாஹல் 80 போட்டிகளில் விளையாடி 96 விக்கெட்களுடன் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த வரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் 110 போட்டிகளில் 91 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.
அடுத்ததாக புவனேஷ்வர் குமார் டி20ல் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
5வது இடத்தில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா 70 போட்டிகளில் 89 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
சமீபத்தில் ஓய்வை அறிவித்த ரவிசந்திரன் அஷ்வின் 65 டி20 போட்டிகளில் விளையாடி 72 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
நமது பட்டியலின் கடைசி இடத்தில் இருக்கும் குல்தீப் யாதவ் 40 போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.